வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 2 மே, 2010

சுவிஸில் புளொட்டின் மேதின ஊர்வலம்.. சிறப்பாக நடைபெற்றது!! (புகைப்படங்கள் முழுமையாக இணைப்பு)



சுவிஸில் உள்ள இடதுசாரிகள் மற்றும் முற்போக்கு முன்னணிகளுடன் ஈபிஆர்எல்எப் -பத்மநாபா அமைப்புடன் இணைந்து தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) அமைப்பால் சுவிஸில் நேற்று சனிக்கிழமை காலை மேதின ஊர்வலம் நடைபெற்றது.
காலை 10மணிக்கு சுவிஸ் கெல்வெத்தியா பிளாத்ஸ் என்னும் இடத்தில் ஆரம்பமான புளொட் இயக்கத்தின் மேதின ஊர்வலம் பெல்வி என்னும் இடத்தில் நிறைவடைந்தது கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது பெண்கள் குழந்தைகள் கழகதோழர்கள் கழக ஆதரவாளர்களும் கலந்து கொன்டு சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.. மேற்படி மேதின ஊர்வலத்தில் புளொட் ஜேர்மன் கிளைத் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இவ் ஊர்வலத்தில் மற்றும் ஒர் பகுதியில் கலந்து கொன்ட சுவிஸ் புலிகளின் மேதின ஊர்வலத்தில் இதுவரை காலமும் இல்லாத வகையில் முதன்முறையாக மிக சொற்ப அளவிலேயே மக்கள் கலந்து கொன்டு இருந்தனர். இதுவரை காலம் சுவிஸ் புலிகளின் மேதின ஊர்வலத்தில் பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள் (புலிகளின் இணையங்களில் 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொன்டுள்ளனர் என தெரிவிப்பார்கள்) கலந்து கொன்ட போதும் இம்முறை குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு 50ற்கும் 100க்கும் இடைபட்ட பொதுமக்களே கலந்து கொன்டுள்ளதுடன் அதிலும் பிரபாகரனின் இரு புகைப்படங்களும் சிறுவர்களின் கையில் பத்துக்கும் குறைவான புலிக்கொடிகளே காணப்பட்டது இது குறித்து அங்கிருந்த அரசியல் விமர்சகர் தெரிவிக்கையில்.. “வெளிநாட்டில் இருந்த புலி ஆதரவு மந்தைகளை நம்பி பிரபாகரன் போராட்டத்தில் ஈடுபட்டது மிகவும் கவலைக்குரிய விடயம் என்பது தற்போது தெளிவாகப் புரிகின்றது” எனத் தெரிவித்தார்
(நன்றி.. தகவல் & புகைப்படங்கள்.. எஸ்.ஜி.எல் -சுவிஸ்)


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’