வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 6 மே, 2010

ஊடகவியலாளர் றூவன் வீரக்கோன் பிணையில் விடுதலை // ஊடகவியலாளர் சுசில் கிந்தெல்பிட்டியவை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு


ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் இணைந்து அரசாங்கத்திற்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட ஊடகவியலாளர் றூவன் வீரக்கோன் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபரின் கடவுச்சீட்டு நீதிமன்றத்தினால் பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் அதேவேளை, இவர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் காலை வேளையிலும் குற்றப்புலனாய்வுப் பிரிவுத் திணைக்களத்திற்கு சமூகமளிக்க வேண்டும் எனவும் றூவன் வீரக்கோனுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது//.ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் வேட்பாளரும், ஊடகவியலாளருமான சுசில் கிந்தெல்பிட்டியவை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் குமாரி அபயரட்ன இன்று உத்தரவிட்டார். 
இவர் தொடர்பான விசாரணைகள் இன்னும் முடிவடையவில்லை என மிரிஹான பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து, சுசில் கிந்தெல்பிட்டியவை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலிற்கு முன்னராக சுசில் கிந்தெல்பிட்டியவின் வாகனத்தில் ஆயுதம் இருந்ததாகவும், அவர் தன்னை அச்சுறுத்தியதாகவும்  பெண்மணி ஒருவர் செய்த முறைப்பாட்டை அடுத்து, சுசில் கிந்தெல்பிட்டிய பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டிருந்மை குறிப்பிடத்தக்கது. 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’