வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 31 மே, 2010

இந்தியத் திரைப்பட விழா : நவீனமாகிறது சுகததாச உள்ளக அரங்கு

இலங்கையில் எதிர்வரும் ஜூன் 2ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சர்வதேச இந்தியத் திரைப்பட விருது விழாவுக்கான ஏற்பாடுகள் கொழும்பில் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.
சுகததாச உள்ளக அரங்கில் அலங்கார வேலைகளும் தொழில்நுட்பப் பணிகளும் துரிதகதியில் நடைபெற்றுவருகின்றன. இதற்கென 50 தொழில்நுட்பப் பணியாளர்கள் மும்பாயிலிருந்து இங்கு வந்துள்ளனர்.
விசேட விமானத்தின் மூலமாகவே அவர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர் என விழா ஏற்பாட்டுக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இந்த விழாவில் பங்கேற்பதற்காக இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும் சுமார் மூவாயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்கவிருப்பதாகth தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் கொழும்பின் பல்வேறு பகுதிகளிலும் இந்தியத் திரைப்பட விருதுவிழா தொடர்பான அலங்காரப் பணிகளை கொழும்பு மாநகரசபை மேற்கொண்டு வருகிறது. கொழும்பு விகாரமாதேவி பூங்கா உட்பட பல இடங்கள் வண்ணமயமாக்கப்பட்டு வருகதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
திரைப்பட விருது வழங்கும் விழாவின் ஆரம்ப வைபவம் பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்திலும் நட்புறவு கிரிக்கெட் சுற்றுப்போட்டி கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்திலும் விருது வழங்கும் விழா சுகததாஸ உள்ளக அரங்கிலும் நடைபெறவிருக்கின்றன.
இறுதி நாள் விழாவில் பங்கேற்பதற்காக இந்தியாவிலிருந்து வருகை தரவிருக்கும் திரையுலக நட்சத்திரங்களை பண்டாரநாயக்க ரயில் நிலையத்திலிருந்து மருதானை வரை ரயிலில் அழைத்து வருவதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
விருது வழங்கும் நாளன்று ஆமர் வீதி சந்தியிலிருந்து இங்குறுகொட சந்திவரைக்குமான பிரதான வீதி மூடப்பட்டிருப்பதுடன் மருதானையிலிருந்து ஆமர் வீதி சந்தி வரைக்குமான வீதியில் மட்டுப்படுத்தப்பட்ட வாகனங்கள் மட்டுமே பயணிக்க அனுமதியளிக்கப்படும் என்று போக்குவரத்து பொலிஸார் அறிவித்துள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’