வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 14 மே, 2010

பிரிட்டிஷ் அமைச்சரவையில் முதன்முறையாக பாக். பெண் பதவியேற்பு

கன்சர்வேடிவ் கட்சியின் தலைவரான டேவிட் கெமரோனின் அமைச்சரவையில் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த இஸ்லாமிய பெண்மணி ஒருவர் அங்கம் வகிக்கின்றார்.

பிரதமராகப் பதவி ஏற்ற பின்னர், கெமரோன் தனது புதிய அமைச்சரவையை அறிவித்தார். இவரது அமைச்சரவையில் பரோனஸ் சயீதா வர்சி (39) எனும் பாகிஸ்தானிய பெண் அமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
வழக்கறிஞரான சயீதா வர்சி, கன்சர்வேடிவ் கட்சியின் துணைத் தலைவராகவும் பதவி வகித்தவர். கெமரோன் அமைச்சரவையில் இவர் இலாகா இல்லாத கபினட் அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.
இங்கிலாந்தில் முஸ்லிம் பெண் ஒருவர் அமைச்சரானதும் 72 ஆண்டுகளுக்குப் பின் கூட்டணி அரசு பதவியேற்றிருப்பதும் இதுவே முதல் தடவை என அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’