வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 12 மே, 2010

இலங்கை அணியின் அரையிறுதி வாய்ப்பு உறுதி


மேற்கிந்திய தீவுகளின் 20-20 உலகக்கிண்ண போட்டியின் காலிறுதியின் இறுதிப் போட்டியில் அரையிறுதி வாய்ப்பிற்கான இலக்குடன் இலங்கை இந்திய அணிகள் பலப்பரீட்சை கண்டன.
மிகவும் விறுவிறுப்பாக நேற்றைய தினம் இடம்பெற்ற இலங்கை- இந்திய அணிகளுக்கிடையலான போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன் படி ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக கார்த்திக்,கம்பீர் இருவரும் களம் இறங்கினர்.
கார்த்திக்13, கம்பீர்41, ரெய்னா63, டோனி23, யுவராஜ் சிங்1, பதான்13, ஒட்டங்களை பெற்றனர். இந்திய அணி உதிரிகளாக 09 ஓட்டங்களை பெற்றது. 20ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 163 ஓட்டங்களை எடுத்திருந்தது. இந்திய அணியின் நேற்றைய ஓட்ட வீதம் 8.15 ஆகும்.
இலங்கை அணியின் பந்து வீச்சில் துஷார, மலிங்க இருவரும் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர். பெரேரா 1 விக்கெட்டை கைப்பற்றினார்.
164 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்குதுடுப்பெடுத்தாடிய இலங்கை அணியில் ஜயவர்த்தன4, ஜயசூரிய 0, இருவரும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களம் இறங்கினர். எனினும் இருவரும் சிறப்பாக பிரகாசிக்கவில்லை .
பின்னர் களம் இறங்கிய ஏனைய வீரர்கள் டிலசான்33, சங்கக்கார46, மத்தியூஸ்46, கப்புகெதர37,ஓட்டங்களை பெற்றனர்.உதிரிகளாக 1 ஓட்டம் பெறப்பட்டது.20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 167 ஓட்டங்களை எடுத்தது. நேற்றைய போட்டியில் இலங்கை அணியின் சராசரி ஓட்ட வீதம் 8.35 ஆகும்.
இந்திய அணியின் பந்து வீச்சு சார்பில் ஆகியோர் நெஹ்ரா ,பதான் இருவரும் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.வினய் குமார் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
நேற்றைய போட்டியின் ஆட்ட நாயகனாக மத்யூஸ் தெரிவு செய்யப்பட்டார். இலங்கை அணியின் வெற்றியுடன் இலங்கை அணி 2 புள்ளிகளுடன் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளதுடன். இந்திய அணி போட்டியில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’