வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 9 மே, 2010

சூப்பர் 8 முதல் போட்டியில் வென்றது இலங்கை!-ஜெயவர்த்தன தரப்படுத்தலில் தொடர்ந்து முதலிடம்

ஜெயவர்த்தனவின் தொடர் அதிரடி ஆட்டம்
 டுவெண்டி 20 உலக கிண்ண போட்டிகளில், நேற்று பார்படோஸ் மைதானத்தில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கும் இலங்கை அணிகக்குமிடையிலான சூப்பர் 8 போட்டியில் 57 ரன்கள் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்றது இலங்கை அணி!


முதலில் களமிறங்கிய இலங்கை அணியின் சார்பில், நல்ல (f)போர்மில் இருக்கும் மஹெல ஜெயவர்த்தன வழமை போல இவ் ஆட்டத்திலும்  56 பந்துகளில் 98 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டார்.இதில் 4 சிக்சர்களும், 9 பவுன்றிகளும் அடங்கும்.அவருடன் இணைந்து குமார் சங்ககார, 49 பந்துகளில் 68 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 195 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது இலங்கை அணி.

பதிலுக்கு களமிறங்கிய மேற்கொந்திய தீவுகளின் நம்பிக்கை நட்சத்திரம், கிரிஸ் கேய்ல் 5 ஓட்டங்களுடன் நுவன் குலசேகரவின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அடுத்தடுத்து வந்தவர்களும் குறைவான ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 138 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது மேற்கிந்திய தீவுகள்.
பந்துவீச்சில் மெண்டிஸ், மலிங்க, தலா 3 விக்கெட்டுக்களை பெற்றுக்கொண்டனர்.
ஆட்டநாயகனாக ஜெயவர்த்தன தெரிவானார்.
வழமை போல் அல்லாதுஆரம்பதுடுப்பாட்டவீரராககளமிறங்குவத, சுதந்திரத்தை அளிப்பதாகவும், சில டெக்னிக்ஸ் ஷொட்ஸ் பிரயோகிப்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளார் அவர்.
சூப்பர் 8 குழுவில் முன்னிலையில் இருக்கிறது இலங்கை!
இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் சூப்பர் 8 க்கான குழுத்தெரிவில் f பிரிவில் முன்னியிலையில் இருக்கிறது இலங்கை அணி!
இன்னமும், இந்தியா அவுஸ்த்திரேலியாவுடனான போட்டிகளில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவை வீழ்த்தியது அவுஸ்த்திரேலியா 
இதேவேளை நேற்று நடைபெற்ற அவுஸ்த்திரேலிய, இந்திய அணிகளுக்கு இடையிலான சூப்பர் 8 சுற்றுப்போட்டியில், இந்தியாவை இலகுவாக வீழ்த்தியது அவுஸ்த்திரேலிய அணி!
முதலில் களமிறங்கிய அவுஸ்த்திரேலியாவின் சார்பில் ஷேன் வட்சன், வார்னர் முறையே 54,72 ஓட்டங்களை குவித்தனர். 20 ஓவர்கள் முடிவில் 184 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது அவ் அணி!
பதிலுக்கு களமிறங்கிய இந்திய அணியின் சார்பில் ரோஹித் ஷர்மா மாத்திரம் ஆட்டமிழக்காமல் 79 ரன்களை பெற்றுக்கொண்டார். 17.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 135 ஓட்டங்களை மாத்திரமே இந்தியாவால் எடுக்க முடிந்தது.
பந்துவீச்சில் நனாஸ், டைட் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
அவுஸ்த்திரேலியாவின் 4 வேகப்பந்துவீச்சாளர்கள் விளையாடியதே வெற்றிக்கு காரணம்
அவுஸ்த்திரேலியாவின் 4 வேகப்பந்துவீச்சாளர்கள் களமிறங்கியதே அணியின் வெற்றியை இலகுவாக்கிவிட்டதாக தெரிவித்துள்ள இந்திய அணியின் கேப்டன் தோனி, அடுத்து வரும் இரு முக்கிய போட்டிகளிலும் கவனமாக விளையாட வேண்டியது அவசியம் என தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’