வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 8 மே, 2010

மன்னார் 'பள்ளிமுனை 49 வீட்டுத் திட்டம்' நாளை திறப்பு

'மகிந்த சிந்தனை'யின் தேசிய கொள்கைக்கேற்ப, வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நிதி மற்றும் தொழில்நுட்ப பங்களிப்புடன், 'வடக்கின் வசந்தம்' நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பள்ளிமுனைக் கிராமத்தில் அமைக்கப்பட்ட 'பள்ளிமுனை 49 வீட்டுத் திட்டம்' நாளை (ஞாயிறு) பிற்பகல் 2.30 மணியளவில் திறந்து வைக்கப்படும்.

வீடமைப்பு நிர்மாணத்துறை, பொறியியல் சேவை, பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச இதனைத் திறந்து வைப்பார்.
கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் றிஷாட் பதியுதீன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மன்னார் அரசாங்க அதிபர் ஆகியோர் திறப்பு வைபவத்தில் கலந்து கொள்வர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’