வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 17 மே, 2010

இங்கிலாந்து அணி 35 வருட கனவு, முதன் முறையாக உலகக்கிண்ணத்தை கைப்பற்றியது


மேற்கிந்திய தீவுகள் மண்ணில் இரண்டு வாரங்களுக்கு மேலாக 12 அணிகள் பங்கேற்ற இருபதுக்கு 20 போட்டியில் இங்கிலாந்து முதன் முறையாக உலகக்கிண்ணத்தை கைப்பற்றியது,
முதன் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அவுஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான எதிர்பார்ப்பு நிறைந்த இறுதிப்போட்டி பார்படோசில் நேற்று நடந்தது. இரு அணியிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் தலைவர் கொலிங்வூட் முதலில் அவுஸ்திரேலிய அணியை துடுப்பெடுத்தாடும் படி பணித்தார்.
அவுஸ்திரேலிய அணி சார்பில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக வொட்சனும்(02), வோர்னரும்(02) களம் இறங்கினார்கள்.எனினும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக பிரகாசிக்க தவறிவிட்டனர்,தொடர்ந்து களம் இரங்கிய அவுஸ்திரேலிய வீரர்கள் கிளார்க் 27, ஹைடன் 01, டி.ஜே ஹசி 59, வைற் 30, மைக்கல் ஹசி 17, ஸ்மித் 01, ஓட்டங்களையும் பெற்றனர், அவுஸ்திரேலிய அணி வீரர்கள் எவருமே சிறப்பாக பிரகாசிக்க வில்லை,
அணியில் 8 ஓட்டங்கள் உதிரிகளாக பெறப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 147 ஓட்டங்களை எடுத்தது. அவுஸ்திரேலிய அணியின் நேற்றைய ஓட்ட வீதம் 7.35 ஆகும்
148 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக லம்ப் 02,கிஸ்வொற்றர் 63, ஓட்டங்களை பெற்றனர், தொடர்ந்து வந்த பீற்றசன்47, கொலிங்வூட்12, மோர்கன்15 ஓட்டங்களை எடுத்தனர்,
இங்கிலாந்து அணியின் உதிரிகளாக 09 ஓட்டங்கள் பெறப்பட்டது, இங்கிலாந்து அணி 17 ஓவர்கள் முடிவில் 18 பந்துகள் மீதமிருக்க 3 விக்கெட்டுக்களை இழந்து 148 ஓட்டங்களை பெற்றது, அணியின் ஓட்ட வீதம் 8.70 ஆகும்.
இங்கிலாந்தின் வெற்றிக்கு வித்திட்ட பீட்டர்சனும், கீஸ்வெட்டரும் தென்ஆபிரிக்காவில் பிறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து அணி உலக கோப்பையை வெல்வது இதுவே முதன் முறை என்பதால் இங்கிலாந்து நாட்டிற்கு இந்த நாள் சரித்திர சாதனை நாளாக அமைந்தது. இங்கிலாந்தின் 35 ஆண்டு கனவு நனவானது , இதற்கு முன்பு 50 ஓவர் உலக கிண்ணத்தை கூட இங்கிலாந்து வென்றதில்லை.
கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்து அணி, 1975 ஆம் ஆண்டு முதல் நடந்து வரும் ஒரு நாள் போட்டி உலகக்கிண்ண போட்டிகளில் மூன்று முறை இறுதிப்போட்டிக்கு வந்தும் கிண்ணத்தை பெறவில்லை.
1979ஆம் ஆண்டு 92 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியிடமும், 1987ஆம் ஆண்டு 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவிடமும், 1992ஆம் ஆண்டு 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடமும் தோற்றிருந்தது.
பின்னர் 2004ஆம் ஆண்டு நடந்த மினி உலகக்கிண்ணம் எனப்படும் ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ணத்தை இறுதிப்போட்டியில் 2 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியிடம் தோற்று இருந்தது.
நடைபெற்று வந்த 3ஆவது உலக கிண்ண போட்டியில் எந்த ஒரு தோல்வியையும் சந்திக்காமல் தொடர்ந்து 6 வெற்றிகள் பெற்றிருந்த அவுஸ்திரேலிய அணி கடைசியில் கோட்டை விட்டது ஏமாற்றமே.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’