வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 15 ஏப்ரல், 2010

ஆளும் சுதந்திர முன்னணிக்கு எதிராக நடிகை கீதா குமாரசிங்க வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக தெரிய வருகிறது.. தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ள முடியாது -கீதா குமாரசிங்க!

தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ள முடியாது என கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட பிரபல நட்சத்திரம் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும் குமாரசிங்கவிற்கு இம்முறை தேர்தலில் நாடாளுமன்ற உறுப்புரிமையை பெற்றுக் கொள்ளக்கூடிய அளவு விருப்புவாக்குகள் கிடைக்கவில்லை நாடாளுமன்றத் தேர்தலில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக நேற்றைய தினம் ஊடகங்களுக்கு அளித்த செவ்வியின் போது அவர் குறிப்பிட்டுள்ளார்
கம்பஹா மாவட்டத் தேர்தல் முடிவுகள் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல எனவும் இதனை மூளை உடையவர்கள் எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
பிரபல நடிகை கீதா குமாரசிங்க தான் போட்டியிட்ட ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளார். பிரிட்டிஷ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் சிங்கள மொழியிலான சங்தேஷய செய்திச்சேவைக்கு அளித்த பேட்டியில் வாக்குகள் எண்ணப்படும் பொழுது முன்னணியில் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். கம்பஹா மாவட்ட காலி தொகுதியில்; ஆளும் கட்சியின் சார்பில் கீதா குமாரசிங்க போட்டியிட்டிருந்தார். தன்னுடைய கட்சியின் தலைவர்களாலேயே தனக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர்களது பெயர்களை தற்போது வெளியிட முடியாத நிலையும் உள்ளதாகவும் அவர் கூறினார். காலியில் சர்ச்சைக்குரிய முன்னாள் மாகாணசபை உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றிருந்தார். முன்னாள் அமைச்சரும் முதன்மை பேட்பாளருமான பியசேன கமகே தெரிவு செய்யப்பட்டவர்களில் 5வது இடத்தில் காணப்படுகின்றமையும் இங்கு சுட்டிக் காட்டதக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’