ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி கொழும்பு கோட்டை ரயில் நிலயத்துக்கு முன்னால் உண்ணாவிரதத்தில் ஈடுப்பட்ட பிக்குமாருக்கு நேர்ந்தது என்னவென்று விபரங்கள் அடங்கிய அறிக்கை ஒன்றினை சமர்பிக்குமாறு பொலிஸாருக்கு கொழும்பு மேலதிக நீதவான் கிகான் ரணவக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.சட்டவிரோதமாக கோட்டை ரயில் நிலையத்தின் முன்பாக உண்ணாவிரதப் போராட் டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்ற பிக்குகளை அப்புறப்படுத்துவதற்கான உத்தர வைப் பிறப்பிக்குமாறு கோட்டை பொலிஸாரின் சார்பில் மன்றில் ஆஜராகியிருந்த சட்டத்தரணிகள் நீதவானிடம் நேற்றுக்காலை கோரியிருந்தனர். அந்தக் கோரிக்கையை விடுத்துக்கொண்டிருந்த வேளையிலேயே குண்டர்கள் குழுவொன்று தேரர்களை பலவந்தமாக பஸ்களில் ஏற்றிச்சென்று விட்டதாக நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. இதன் போதே, கோட்டை மேலதிக நீதவா ன் மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’