ஆபிரிக்க நாடான சூடானில் ஒமர் அல்-பஷீர் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
24 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு அதிபர் தேர்தல் நடந்தது. தற்போதைய அதிபர் ஒமல் அல்-பஷீர் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து சூடான் மக்கள் விடுதலை இயக்கத் தலைவர் சல்வா கீர் மற்றும் பல அரசியல் கட்சியினர் போட்டியிட்டனர்.
இந்தத் தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. அதில் 68 சதவீத வாக்குகள் பெற்று அதிபர் ஒமர்அல்-பஷீர் மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.இதனையடுத்து சூடானில் அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சிக் கொண்டாடினர். நாடு முழுவதும் கோலாகலமாக விழா எடுத்தனர்.
முன்னதாக நடந்த தேர்தலில், சூடான் மக்கள் விடுதலை இயக்கத் தலைவர் கீர், தெற்கு சூடான் பகுதியில் 93 சதவீதம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கு அதிபர் பஷீர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு மறுதேர்தல் நடத்தப்பட்டு நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. முடிவில் 68 சதவீதம் வாக்குகள் பெற்று பஷீர் வெற்றி பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.
ஆனால் இந்தத் தேர்தல் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. தேர்தலில் தில்லுமுல்லு நடந்துள்ளது, குறிப்பாக தெற்கு சூடானில் இது அரங்கேறியுள்ளது என குற்றஞ்சாட்டியுள்ளன.
வெற்றி பெற்றுள்ள அதிபர் ஒமர்அல்-பஷீர் மீது சர்வதேச குற்றப் புலனாய்வு நீதிமன்றில் போர் குற்றவாளி என வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால் இதை அவர் மறுத்துள்ளார். _
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’