இந்தியாவிலிருந்து வருகை தந்திருக்கின்ற பென்கள் சுயதொழில்(சேவா) அமைப்பின் பிரதிநிதிகள் இனறு கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களை சந்தித்து உரையாடினர்.
மேற்படி கலந்துரையாடலில் கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற பென்களின் வாழ்வாதார மேம்பாட்டு அபிவிருத்தி தொடர்பாக பேசப்பட்டது. விசேடமாக கணவனை இழந்த பென்களின் சுயதொழில் மேம்பாடு தொடர்பாகவும் அவர்களுக்கான கல்வி அபிவிருத்தி பாதுகாப்பு என்பன தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற 12000 விதவைகளில் 8000 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்றார்கள். இவர்களில் 6200 பேர் 3 பிள்ளைகளுக்கு தாயாக இருப்பது விசேட அம்சமாகும். கிழக்கு மாகாணத்தில் பெண்கள் அபிவிருத்தி குறித்து கிழக்கு மாகாண முதலமைச்சர் அதிக அக்கறை கொண்டு செயற்படுவதனையிட்டு மேற்படி அமைப்பு முதலமைச்சருடன் இனைந்து தாம் பணிபுரிய இருப்பதாகவும் மேற்படி அமைப்பில் முகாமைத்துவப் பணிப்பாளர் திருமதி. உமாதேவி சுவாமிநாதன் தெரிவித்தார்.
இக்குழுவானது வாகரை, ஏறாவுர்பற்று பிரதேச சபைக்குட்பட்ட செங்கலடி பதுளை வீதி, போரைதீவுப்பற்று ஆகிய பிரதேசத்திற்கு விஜயம் செய்ய இருக்கின்றார்கள். மேற்படி கலந்துரையாடலில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், சேவா லங்கா நிறுவனப் பணிப்பாளர், சமுக சேவகள் பனிப்பாளர் மணிவண்ணன்; மற்றும் இந்திய பென்கள் அமைப்பின் பிரதி நிதிகளும் கலந்து கொண்டார்கள். இச்சந்திப்பு முதலமைச்சரின் மட்டக்களப்பு வாசல்தலத்தில் இடம்பெற்றது..
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’