மட்டக்களப்பு வாழைச்சேனைப் பிரதேசத்தில் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று பிற்பகலில் கைதுசெய்யப்பட்டதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் பொலீஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்
. குறித்த பிரதேச வீடொன்றினுள் புகுந்த கொள்ளையர்கள் வீட்டிற்கு சேதம் விளைவித்துள்ளதுடன் 8லட்சத்து 50ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்களையும், 39லட்சம் ரூபாய் பெறுமதியான பணத்தையும் கொள்ளையிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை வாழைச்சேனைப் பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’