நுவரெலியா மாவட்டத்தில் சக்தி தொலைக்காட்சியின் சிரேஷ்ட ஊடகவியலாளரும், மின்னல் நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான ஜெ.சிறீரங்கா வெற்றி பெற்றுள்ளதாக தெரியவருகிறது. பிரஜைகள் முன்னணியின் பொதுச்செயலாளரான ஜெ.சிறீரங்கா ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் போட்டியிட்டார். நுவரெலியா மாவட்டத்திலிருந்து ஐந்து தமிழர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், முன்னள் மத்திய மாகாண அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன், சட்டத்தரணி இராஜதுரை ஆகியோர் ஆளும் கட்சியின் சார்பில் வெற்றிபெற்றுள்ளனர்.தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவர் பி.திகாம்பரம் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளார்.மலையகத்தின் முன்னாள் எம்.பிக்கள் பலர் இத்தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர்
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’