வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 20 ஏப்ரல், 2010

மெரீனா கடற்கரையில் கைதான இலங்கையர் மீது தொடர்ந்தும் விசாரணை

தமிழ்நாடு மெரீனா கடற்கரைப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட இலங்கையர்மீது தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தமிழக செய்திகள் கூறுகின்றன.
/ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி இடம்பெற்ற பங்களுர் சின்னச்சாமி விளையாட்டரங்குக்கு அருகில் இடம்பெற்ற குண்டுவெடிப்பைத் தொடர்ந்து சென்னைப் பொலிசார் சோதனை நடத்தியபோது இவர் நேற்று முன்தினமிரவு கைதுசெய்யப்பட்டிருந்தார்.
சென்னை மெரீனா கடற்கரைப் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் மீனவப்படகுகள் அதிகளவில் நிறுத்தப்பட்டிருந்த பகுதியில் மணற்பரப்பில் இவர் மறைந்திருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர் புத்தளம் பகுதியைச் சேர்ந்த முகமது அன்சாரி என்றும் இவர் கடந்த இருமாதங்களுக்கு முன்னர் சுற்றுலா விசாவில் இந்தியா சென்றிருந்தபோது கடவுச்சீட்டு தொலைந்துள்ளதாக விசாரணையின்போது கூறியதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’