வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 28 ஏப்ரல், 2010

சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய செயற்பாடுகளில் இருந்து ஓராண்டுக்கு ரமணன் என்பவர் அவ்வமைப்பால் நீக்கம்!!

சுவிஸ் நாட்டில் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் எனும் அமைப்பால் கடந்த பத்து தினங்களுக்கு முன் ஓர் கலைநிகழ்வொன்று எந்தவொரு அரசியல் செயற்பாடுகளுக்குமோ அன்றில் எந்தவொரு இயக்கங்கள் சார்பாகவோ நடைபெறாது எமது புங்குடுதீவு மண்ணுக்காகவும் புஙகுடுதீவில் உள்ள
மக்களுக்காகவுமே நடைபெறும் எனும் அறிவித்தல்களுக்கு அமைய பலரது ஒத்துழைப்புடன் நடைபெற்றது. இருப்பினும் இந்நிகழ்வில் இறுதியாக நாடகமொன்றை தயாரித்து அளித்த ரமணன் என்பவர் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் கட்டுப்பாடுகள், ஒழுங்குவிதிகளை மீறி நடந்து கொண்டதுடன் அரசியல் பேச்சு மட்டுமல்லாமல் மேடையில் ஆவேசமாக தரம்தாழ்ந்தி பேசிய காரணத்தினால் மேற்படி ரமணன் இன்றிலிருந்து ஓராண்டு காலத்திற்கு சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய செயற்பாடுகளில் இருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளதாக புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தால் அறிவிக்கப் பட்டுள்ளது.
இதுகுறித்து மேற்படி சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் தற்போதைய தலைவர் உட்பட நிர்வாகத்தைச் சேர்ந்த சிலருடன் நாம் தொடர்பு கொண்டு கேட்ட போது “இது உண்மை தான் எனவும் இது அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையாகக் கருதாது, இனிவரும் காலங்களிலாவது எவரும் எந்தவொரு அரசியலையோ அன்றில் எந்தவொரு தனிநபர்கள் மீதான தாக்குதல் பேச்சுக்களையோ எமது செயற்பாடுகளில் புகுத்தாது எமது புங்குடுதீவு மண்ணில் அல்லல்படும் மக்களின் எதிர்கால வாழ்க்கையை கருத்தில் கொண்டும் பொலிவிழந்து போய் உள்ள எமது புங்குடுதீவை அபிவிருத்தி செய்யவும் அனைவரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டுமெனவும்” தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’