உச்சி மாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா வரும் பிரதமர் மன்மோகன் சிங்கை, அந்நாட்டு அதிபர் ஒபாமா நாளை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்துவார் என வெள்ளை மாளிகைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அணு ஆயுதங்கள், அணுசக்தி நிலையங்கள் பாதுகாப்பு தொடர்பான உச்சி மாநாடு அமெரிக்காவில் எதிர்வரும் 12, 13 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்கா செல்கிறார்.
மாநாடு நடைபெறும் முன்னரே இரு நாட்டுத் தலைவர்களும் சந்தித்துப் பேசுவார்கள் என வெள்ளை மாளிகை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சந்திப்பின்போது அணுசக்தி ஒப்பந்தம், இருதரப்பு உறவுகள் மற்றும் இதர விவகாரங்கள் குறித்து முக்கிய ஆலோசனைகளை ஒபாமாவும், மன்மோகனும் பரிமாறிக் கொள்வார்கள் என அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’