ஐபிஎல் அணிகள் சூதாட்டங்களின் மத்தியில் ஏலம் எடுத்தது போன்ற விடயங்களில் பல கோடி ரூபாய் மோசடி செய்த சர்ச்சைகளில் சிக்கியுள்ள லலித் மோடி தனது தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என ஐபிஎல் நிர்வாகக் குழு தெரிவித்திருந்த போதிலும் என்னால் விலக முடியாது. அந்த பேச்சுக்கே இடம் இல்லை என டுபாய் சென்று திரும்பிய லலித் மோடி தெரிவித்துள்ளார்.
எதிர் வரும் 26 இல் ஐபிஎல் நிர்வாகக் குழுக் கூட்டம் இடம் பெறுகிறது கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுக்கு லலித் மோடி கட்டுப்படுவார்.
கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய துணைத் தலைவராகவும் மோடி செயற்படுகிறார். எனவே, மோடி உள்ளிட்ட சகல் விடயங்களிலும் கிரிக்கெட் வாரியத்தின் அனைத்து உறுப்பினர்களும் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில், ஒரு மனதாக முடிவு எடுக்கப்படும்.மத்திய அமைச்சர் சரத் பவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கிரிக்கெட் வாரியத்தின் (பி.சி.சி.ஐ.,) ஒரு அங்கமாக செயல்பட்டு வரும் இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்) சார்பில் போட்டிகளில் தலைவராக செயற்படும் மோடி ஏலங்களின் போது ஏற்பட்ட சூதாட்டம் , ஒளிபரப்ப லஞ்சம் 400 கோடி பெற்றது, வருமானம் தொடர்பில் வரி குறைப்புச் செய்தது , போன்ற பல குற்றச்சாட்டுக்களின் மத்தியில் சிக்கியுள்ளார்.
மேற்படி சர்ச்சைகளிற்கு தீர்வு காணும் வகையில், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் சிதம்பரம், விவசாய அமைச்சர் சரத் பவார் ஆகியோர் நேற்று பேச்சு நடத்தினர்.எனினும் சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பிலான விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’