வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 8 ஏப்ரல், 2010

காலியில் துப்பாக்கிப் பிரயோகம் : தே.வ.க.மத்திய நிலையம் // புத்தளத்தில் அமைச்சர் றிசாத்தின் ஆதரவாளர் மீது தாக்குதல்

புத்தளம் 4ஆவது மைல் கல்லில் அமைந்துள்ள றஹ்மத் நகர் வாக்களிப்பு நியைத்தில், வாக்களித்து விட்டு திரும்பிய அமைச்சர் றிசாத் பதியுதீனின் ஆதரவாளரான அப்துல் கபூர் முஹம்மத் நசீம் என்பவர் கடுமையாகத் தாக்கப்பட்டு புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
மூன்று வாகனங்களில் வந்த ஐக்கியத் தேசியக் கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளர் நூர்தீன் மசூர் தலைமையிலான குழுவினரே இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாகப் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து புத்தளம் பொலிஸார், தாக்குதலுடன் தொடர்புபட்ட நபர்களைக் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அதேவேளை, பாலாவி, எருக்கலம்பிட்டி வாக்குச்சாவடிக்கு முகவராகச் சென்ற ஐக்கிய மக்கள் சுதந்திர  முன்னணியைச் சேர்ந்த முஹம்மத் ஆசாத் என்பவர் தாக்கப்பட்டுள்ளதுடன், அவர் பயணித்த முச்சக்கர வண்டியும் கடுமையாக சேதப்படுத்தப்பட்டுள்ளது  காலியில் துப்பாக்கிப் பிரயோகம் : தே.வ.க.மத்திய நிலையம் காலி தங்கல்ல பிரதேசத்தில் இரண்டு துப்பாக்கி பிரயோக சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் மத்திய நிலையத்தின் இணைப்பாளர் ஹஜ்மீர் தெரிவித்தார்.
எனினும் துப்பாக்கி பிரயோகம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உட்பூசல் காரணமாகவே இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. எனினும் இச்சம்பவங்களின் போது எவரும் காயங்களுக்கு உள்ளாகவில்லை என அந்நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, நாடளாவிய ரீதியில் இதுவரை 67 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ___   

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’