வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

வன்னி மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார் செல்வம் அடைக்கலநாதன்

வன்னிமாவட்ட வாக்காளர்கள் அனைவருக்கும் தாம் நன்றி தெரிவிப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய செல்வம் அடைக்கலநாதன், வினோநோகராதலிங்கம் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்துக்கொண்டிருக்கின்ற வேளையில் தமிழ் பிரதிநிதித்துவம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். அதேபோன்று எமக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கின்றோம்.
நிவாரண கிராமங்களில் வாழும் மக்களை மீள்குடியேற்றுதல் உட்பட மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு நாம் தயாராக இருக்கிறோம். எம்மோடு கைகோர்த்துக்கொள்ளுமாறு அனைவரிடமும் வேண்டுகோள் விடுக்கிறோம் - என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’