வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 29 ஏப்ரல், 2010

பிரான்ஸ் தமிழ் பெண்கள் ஏற்பாட்டில் யாழ். கழகங்களுக்கிடையிலான போட்டிகள்

பிரான்ஸ் தமிழ்ப்பெண்கள் அமைப்பினரின் ஏற்பாட்டில் வருடம்தோறும் நடாத்தப்பட்டு வரும் உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம், கிரிக்கெட் போட்டிகள் கழகங்களுக்கிடையில் இன்று இடம்பெற்றது.

பிரான்ஸ் தமிழ்ப்பெண்கள் அமைப்பினர் வருடம் தோறும் நடாத்திவரும் நிகழ்வுகளின் வரிசையில் இன்று இந்நிகழ்வு இடம்பெற்றது.
இப்போட்டிகளில் உதைபந்தாட்டம், கிக்கெட்,கரப்பந்தாட்டம் போன்ற போட்டிகள் இடம்பெற்றன. உதைபந்தாட்டத்தில் 24 கழகங்கள் பங்குபற்றியிருந்தன.
இறுதிப்போட்டியில் ஈழவர விளையாட்டுக்கழகமும், கிறீன் கின்ஸ் விளையாட்டுக் கழகமும் எதிர் எதிர் போட்டியிட்டனர். போட்டியின் இறுதியில் வெற்றிக் கிண்ணத்தை ஈழவர் விளையாட்டுக்கழகம் தட்டிச்சென்றது. 2ஆம் இடத்திற்கான வெற்றிக்கிண்ணத்தை கிறீன் கின்ஸ் விளையாட்டுக்கழகம் தட்டிச்சென்றது. 3ஆம் இடத்திற்கான வெற்றிக்கிண்ணத்தை உதயசூரியன் விளையாட்டுக்கழகம் பெற்றது.
கிரிக்கெட் போட்டியில் 16 கழகங்கள் பங்குபற்றியிருந்தது. இறுதிப்போட்டியில் தமிழர் விளையாட்டுக்கழகம், 93 விளையாட்டுக்கழகமும், யுனைற்றேட் விளையாட்டுக்கழகமும் எதிர் எதிர் போட்டியிட்டனர். போட்டியின் இறுதியில் தமிழர் விளையாட்டுக்கழகம் 93 விளையாட்டுக்கழகம் 1ஆம் இடத்திற்கான வெற்றிக்கிண்ணத்தையும், யுனைற்றேட் விளையாட்டுக்கழகம் 2ஆம் இடத்திற்கான வெற்றிக்கிண்ணத்தையும் பெற்றது.
கரப்பந்தாட்டப்போட்டியில் 7 கழகங்கள் போட்டியிட்டனர். இறுதிப்போட்டியில் இளந்தென்றல் விளையாட்டுக்கழகமும் நியுஸ்ரார் விளையாட்டுக்கழகமும் போட்டியிட்டனர்.
இறுதியில் வெற்றிக்கிண்ணத்தை இளந்தென்றல் விளையாட்டுக்கழகம் பெற்றது. 2ஆம் இடத்திற்கான வெற்றிக்கிண்ணத்தை நியுஸ்ரார் விளையாட்டுக்கழகமும் பெற்றது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’