வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 30 ஏப்ரல், 2010

வீடியோவின் பின்னணியில் மிகப் பெரிய சதி-ரஞ்சிதா

நித்யானந்தாவுடனான வீடியோவை உடனடியாக அகற்றுமாறு கூகுள் மற்றும் யு டியூப் ஆகியவற்றுக்கு ரஞ்சிதா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
டெல்லியைச் சேர்ந்த பி.எம். லா சேம்பர்ஸ் என்ற சட்ட மையம் மூலமாக நடிகை ரஞ்சிதா வெளியிட்டுள்ள விளக்கம்:
நித்யானந்தாவுடன் தன்னை இணைத்து வெளியான வீடியோ மற்றும் செய்திகளைத் தொடர்ந்து இந்த விளக்கத்தை வெளியிடுகிறோம்.
இந்த வீடியோ இந்திய சட்டங்களை மீறிய செயலாகும். ரஞ்சிதாவி்ன் பெயரைக் கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், கெட்ட எண்ணத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
ரஞ்சிதாவிடமோ அவரது குடும்பத்தாரிடமோ அல்லது வக்கீல்களிடமோ விளக்கம் பெறாமல் ஊடகங்கள் இந்த செய்திகளை வெளியிட்டுள்ளன. இதனால் ரஞ்சிதா பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
ரஞ்சிதா தனது தரப்பு நியாயத்தை எடுத்துச் சொல்வதற்கு முன்பே ஒரு தமிழ் வார இதழ், ரஞ்சிதாவிடம் பேட்டி என்ற பெயரில் ஒரு பொய்யான நேர்காணலை வெளியிடப்பட்டது. இதை எல்லா ஊடகங்களும் வெளியிட்டன. இதனால் ரஞ்சிதாவின் மன உளைச்சல் மேலும் அதிகரித்துவிட்டது.
இதையடுத்து ரஞ்சிதா கொடுத்த பேட்டிகள் என்ற பெயரில் தமிழில் ஒரு மாலை நாளிதழிலும் மலையாள நாளிதழிலும், இந்தி மற்றும் தெலுங்கு ஊடகங்களிலும் பொய்யான பேட்டிகள் வெளியாயின. இந்த பேட்டிகள் எதையுமே தான் தரவில்லை என்று ரஞ்சிதா மறுக்கிறார்.
நிதியானந்தாவுடனான வீடியோவுக்கும் ரஞ்சிதாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்த வீடியோவால் அவரது உயிருக்கும் உடமைக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த மன உளைச்சலில் இருந்து வெளியே வர ரஞ்சிதாவுக்கு நாட்கள் பிடிக்கும் என்ற நிலையில் இது தொடர்பான சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்க எங்களுக்கு ரஞ்சிதா அனுமதி தந்துள்ளார்.
அந்த வீடியோ இன்னும் நீதிமன்றங்களில் சட்டப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. ரகசியமாக எடுக்கப்பட்ட அந்த வீடியோவின் நம்பகத்தன்மை, உண்மை நிலை ஆகியவற்றை ஆராய்ந்து நீதிமன்றங்கள் ஆதாரமாக ஏற்காத வரை அந்த வீடியோ ஆதாரப்பூர்வமானத்தல்ல.
இந்த வீடியோவை பலரும் இன்டர்நெட்டில் அப்லோட் செய்வதும், டெளன்லோட் செய்வதுமாக உள்ளதும் சட்டப்படி குற்றமாகும்.

இந்த வீடியோக்களை கூகுள், யு டியூப் ஆகியவை தொடர்ந்து வெளியிடவும், சுற்றுக்கு விடவும், கமெண்ட்கள் எழுதவும் அனுமதித்து வருவதாக ரஞ்சிதா குற்றம் சாட்டுகிறார். வீடியோவில் உள்ள ஒருவர் ரஞ்சிதா என்று சொல்லப்படுவதை அவர் மறுக்கிறார்.
இதனால் அவரது பெயருக்கும் நடிப்புத் தொழிலுக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவரது வருமானமும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த வீடியோவை உடனடியாக அகற்றுமாறு கூகுள் மற்றும் யு டியூப் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். இந்தக் கெடு வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியுடன் முடிவடைகிறது.
இல்லாவிட்டால் அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை தொடங்குவோம். இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 292, 409, 500, 509 ஆகியவற்றின் கீழும், தகவல் தொழில்நுட்ப சட்டங்களின் பிரிவுகள் 66E,
66A, 67, 67A, 67B, 85 ஆகியவற்றின் கீழும் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
கடந்த 20 ஆண்டுகளாக சினிமா துறையில் உள்ள ரஞ்சிதா மிகக் கடுமையான உழைப்பாளி மட்டுமல்ல, மிகவும் ஒழுக்கமான, எந்த கெட்ட பெயரும் வாங்காத நடிகையாவார்.
இதனால் சில ஊடகங்களால் பரப்பப்படும் தவறான செய்திகளை நம்ப வேண்டாம் என்று பொது மக்களையும், குறிப்பாக தனது ரசிகர்களுககு ரஞ்சிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த ஊடகங்கள் வி்ற்பனைக்காகவும் வருமானத்துக்காகவும் இந்த செயலில் ஈடுபட்டு வருகின்றன.
மேலும் இதன் பின்னணியில் மிகப் பெரிய சதியும் இருப்பதாகவும் ரஞ்சிதா கருதுகிறார். அவருக்கு உடல்ரீதியாக, மனரீதியாக சி்க்கலை ஏற்படுத்த முயலும் சதியை அவர் சட்டத்தின் உதவியோடு முறியடிப்பார்.
இந்த சதியின் பின்னணியில் இருப்பவர்களை முறியடித்து தனது பெயரை நிலைநாட்ட சட்டம் தனக்கு உதவும் என ரஞ்சிதா நிச்சயமாக நம்புகிறார்.
மேலும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் தனக்கு உறுதுணையாக உள்ள ரசிகர்கள் , நண்பர்கள், குடும்பத்தினர் ஆகியோருக்கு ரஞ்சிதா தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறார்.
மார்ச் 2ம் தேதி வீடியோ வெளியான பிறகு ரஞ்சிதா வெளியிடும் முதல் விளக்கம் இது தான் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த மன உளைச்சலில் இருந்து வெளியே வர முயலும் தனது தனிமையை மதிக்குமாறும், குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க அனுமதிக்கும் வகையில் நடந்து கொள்ளுமாறும் ஊடகங்களுக்கு ரஞ்சிதா வேண்டுகோள் விடுக்கிறார்.
மேலும் ரஞ்சிதாவுக்கு பெங்களூர் சிஐடி போலீசார் நேரில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் அவருடன் பேசியதாகவும் ஒரு தமிழ் வார இதழில் செய்தி வெளியாகியுள்ளது. இந்தப் பிரச்சனையில் தொடர்பே இல்லாதவர் ரஞ்சிதா. இதனால் அவருக்கு அப்படி ஏதும் நோட்டீஸ் வரவில்லை.
எடிட்டர்களை மகிழ்விக்க நிருபர்கள் சிறப்புப் பேட்டிகள் என்ற பெயரில் இப்படி எதையாவது எழுதுவது வழக்கம் தான் என்பதை ரஞ்சிதா தனது சினிமா வாழ்க்கையில் பலமுறை பார்த்துள்ளார். இப்போதும் அப்படித்தான் எழுதியுள்ளனர்.
இது சட்டப்படி தவறான செயலாகும். ஊடகங்கள் கிரிமினல்மயமாவதைத் தடுக்க தனது கடைசி சொட்டு ரத்தம் வரை, கடைசி பைசா வரை செலவு செய்து மோதிப் பார்க்க ரஞ்சிதா தயாராக உள்ளார்.
இந்த நேரத்தில் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளும் செய்தித் தாள்கள், தொலைக்காட்சிகளுக்கு ரஞ்சிதா நன்றி தெரிவித்துக் கொள்கிறார்.
பல பொது மக்களைப் போல ரஞ்சிதாவும் பன்யான் உள்ளிட்ட பல சமூகத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பொதுத் தொண்டும் ஆற்றி வருபவர் ஆவார்.
இப்போதைக்கு பொது வாழ்வில் இருந்து தூரமாக விலகியிருந்து தனது குடும்பத்துடன் இணைந்திருந்து மன உளைச்சலில் இருந்து வெளியே வரவே ரஞ்சிதா விரும்புகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’