வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 8 ஏப்ரல், 2010

இன்றைய தேர்தல் பதிவின் சில மாற்றங்கள்

இன்று 2010ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. இம்முறை தேர்தல் வாக்களிப்பின் போது மாற்றங்கள் சிலவற்றைக் காணக் கூடியதாக இருக்கின்றது.

காலங்காலமாக இலங்கை வரலாற்றில் வாக்குப் பதிவின் போது, பென்சிலே பயன்படுத்தப்பட்டு வந்தது. இம்முறை முதல் தடவையாக வாக்குப் பதிவு செய்வதற்கு வர்ண பேனாக்கள் பயன்படுத்தப்படுகின்றன.
அது மட்டுமல்ல, இது நாள் வரை சுட்டு விரலில் தடவப்பட்டு வந்த மை, இம்முறை மோதிர விரலில் பூசப்படுகின்றது. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் வெவ்வேறு வர்ண பேனாக்களே வழங்கப்பட்டுள்ளன.
கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் விருப்பு வாக்குகளை மாற்றுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக கட்சிகளின் செயலாளர்களும் சுயேட்சைக் குழுக்களின் உறுப்பினர்களும் சுட்டிக் காட்டியிருந்தனர். இதனையடுத்தே இம்முறை புள்ளடியிடுவதற்குப் பென்சில்களுக்குப் பதிலான வர்ண பேனாக்களைத் தேர்தல் திணைக்களம் வழங்கியுள்ளது.
இன்றைய வாக்களிப்பில் இலகுவில் அழிக்க முடியாத புதுவகை மை ஒன்று பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’