ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் கண்டி மாவட்ட வேட்பாளருமான மனோ கணேசன் கண்டி கச்சேரி வளாகத்திலிருந்து பொலிஸாரால் பலத்த பாதுகாப்புடன் சற்று முன்னர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
தேர்தல் நிலவரங்களைக் கண்டறிந்து கொள்வதற்காக, மனோ கணேசன் கண்டி கச்சேரி வளாகத்திற்கு சென்ற போது, அவரை அங்கு குழுமியிருந்தவர்கள் இடைமறித்துத் தகராறு செய்ய முற்பட்டதையடுத்தே பொலிஸாரால் அவர் அழைத்துச் செல்லப்பட்டார் என அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, கண்டி கச்சேரி வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’