நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பானது வன்னி மாவட்டத்தில் பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்று முதலாமிடத்திலும், இரண்டாவது இடத்தில் அடுத்தபடியாக பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், மூன்றாம் இடத்தை ஐக்கிய தேசியக் கட்சியும்
பெற்றிருப்பதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளது. இது குறித்து அதிரடி இணையம் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் த.சித்தார்த்தன் அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, வட மாகாண மக்களில் ஒரு சாரார் தமிழ்த் தேசியத்தை ஆதரிப்பவர்களாகவும், இன்னுமோர் தரப்பினர் இராமன் ஆண்டாலென்ன? இராவணன் ஆண்டாலென்ன? என்ற மனப்பான்மையிலும் மற்றொரு சாரார் வடகிழக்கில் மகிந்த அரசு எடுத்த நடவடிக்கையை சரியென ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையிலும் இருக்கின்றார்கள் என்பதை இத்தேர்தல் முடிவு காட்டியுள்ளது. இதனைத் தவிர தமிழ்மக்கள் சரிபிழைக்கு அப்பால் வேறு எந்தவொரு அரசியல் மாற்றத்தையும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லையென்பது தெளிவாகப் புரிகின்றது. எதுஎப்படியிருப்பினும் தமிழ்மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளிக்கின்றோம் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் மகிந்த அரசு 03ஆசனங்களையும், இரண்டாவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 02ஆசனங்களையும், மூன்றாவதாக ஐக்கிய தேசியக் கட்சி ஒரு ஆசனத்தையும் பெற்றுக் கொள்ளும் என அதிரடிக்கு கிடைக்கப் பெற்ற தகவல்களின்படி கணிப்பிடப்பட்டுள்ளது. ஆளும் மகிந்த அரசின் சார்பில் 02முஸ்லிம்களும் 01சிங்களவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக 02தமிழர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பாக 01முஸ்லிமும் தெரிவு செய்யப்படவுள்ளதாக அதிரடிக்கு கிடைக்கப் பெற்ற பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.வன்னி மாவட்ட தேர்தல் முடிவின்படி அரசு மூன்று ஆசனங்களையும் கூட்டமைப்பு இரண்டு ஆசனங்களையும் ஜதேகட்சி ஒரு ஆசனத்தையும் பெறும் எனவும் புளொட் அமைப்பு எந்தவொரு ஆசனங்களையும் பெறாது எனவும் தெரிய வருகிறது. இது அதிரடிக்கு கிடைத்த அதிரடி நிருபரின் பிரத்தியேக தகவல்களே தவிர உத்தியோகபூர்வ முடிவு இன்னும் வெளிவரவில்லை














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’