வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 3 ஏப்ரல், 2010

சிங்கள வர்த்தக நகரமாகிறது யாழ்ப்பாணம்; எச்சரிக்கிறார் த.தே.கூ. வேட்பாளர் சிறீதரன்

எமது மண் ஆக்கிரமிக்கப்படுகின்ற அதேவேளை, எமது மக்களுக்குச் சொந்த மான அனைத்து வளங்களும் சுரண்டப் படுகின்றன என்று தமிழ்த் தேசியக் கூட் டமைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
வரணியில் நடைபெற்ற தேர்தல் பிரசார நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் கூறியவை வரு மாறு

எமது மண்ணில் இருந்து எமது மக்கள் வெளியேற்றப்பட்டதன் பின்னர் எமது மக் கள் ஒவ்வொரு வேளை உணவுக்காகவும் போராட வேண்டிய நிலையில் இருக்கின்றனர்.
தமது சொந்தங்களைப் பிரிந்து மீள முடியாத சோகத்தில் வாடும் எமது மக்கள் தமது சொந்த இடங்களுக்குச் செல்ல முடி யாது முள்கம்பி வேலிகளுக்குள் முடக்கப் பட்டுள்ளனர்.
எமது மக்களுக்குச் சொந்தமான கடற் பரப்பில் அந்நிய மீனவர்கள் மீன்பிடித்த லில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழர் தாயகக் கடற்பரப்பில் பெரும்பான்மை மீன வர்கள் மீன்பிடியில் ஈடுபட்டு எமது மக் களுக்குச் சொந்தமான மீன் வளத்தை அள்ளிச் செல்கின்றனர்.
எமது பகுதிகளில் அபிவிருத்தி, புனரமைப்பு எனக் கூறி மேற்கொள்ளப்படும் வேலைகளில் சிங்களவர்களே ஈடுபடுத் தப்பட்டுள்ளனர். ஆனால் எமது படித்த இளைஞர்கள் எத்தனையோ ஆயிரம் பேர் இன்னமும் வேலையில்லாமல் நாள்க ளைக் கழிக்கின்றனர்.
பட்டதாரிகளுக்கு வாக்குறுதிகள்
இதனை விடவும் பட்டம் பெற்ற பட்ட தாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டியது அரசின் கடமையாகும். ஆனால் வேலையற்ற பட்டதாரிகளை அழைத்து தமக்கு வாக்களிக்க வேண்டும், தமக்காக தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடவேண் டும். அவ்வாறு செய்தால் மாத்திரமே வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படும் என வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றன.
யாழ்ப்பாணம் சிங்கள வர்த்தக நகரமாக மாறிக் கொண்டிருக்கின்றது. யாழ்ப்பா ணத்தின் பிரதான தெருக்கள் எல்லாம் சிங்களவர்களே திரிகின்றார்கள். தென்னி லங்கையில் இருந்து யாழ்ப்பாணம் வரு கின்ற சிங்களவர்கள் யாழ்ப்பாணத்தைச் சுற்றிப் பார்க்கின்றார்கள்.
தென்னிலங்கையில் இருந்து வருகின்ற சிங்களவர்களின் பணம் யாழ்ப்பா ணத்தில் உள்ள தமிழர்களுக்குச் சேரக் கூடாது என் பதற்காக தென்னி லங்கையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப் பட்டுள்ள சிங்கள வர்த்தகர்கள் யாழ்ப் பாணத்தின் தெருக்களை ஆக்கிரமித்துள் ளார்கள்.
வெளியிலிருந்து வருகின்ற சிங்களவர் கள் பொருள்களை யாழ்ப்பாணத்தில் தெருவோர விற்பனையில் ஈடுபடும் சிங் களவர்களிடமே பெற்றுச் செல்கின்றனர். இது ஒரு திட்டமிட்ட நடவடிக்கை.
தமிழ் மக்கள் எவரும் வெற்றிலைச் சின் னத்திற்கு வாக்களிக்கக் கூடாது. அவ்வாறு வாக்களிப்பதாக இருந்தால் அது தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு நடவடிக்கையை தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டுவிட்டார்கள் என்று அரசு சர்வதேசத்திற்கு சொல்வதற்கு வாய்ப்பாக அமைந்துவிடும்.
ஈ.பி.டி.பி. கட்சி வீணைச் சின்னத்தில் யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டிருந்தால் அவர்களின் ஆதரவாளர்கள் அந்தச் சின் னத்திற்கு வாக்களிப்பதைப் பற்றி யோசித் திருக்கலாம். காரணம் அந்தக் கட்சியும் தமிழ்க் கட்சியே என்பதால் ஆனால் அந்தக் கட்சியும் வெற்றிலைச் சின்னத் தின் கீழேயே போட்டியிடுகின்றது.
தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இலங்கையில் வாழ்ந்தாலும் சரி சர்வதேசத்தில் வாழ்ந்தாலும் சரி வன்னியில் மக்கள் ஈவிரக்கமற்ற முறையில் படுகொலை செய்யப்பட்டபோது அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.
எனவே, நடைபெறவுள்ள நாடாளுமன் றத் தேர்தலில் தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தெரிவை உறுதிப்படுத்தி, மக்களது உள்ளார்ந்த நிலைப்பாடு என்ன என்பதை இடித்துரைப்பார்கள் என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’