இலங்கையில் 2010 ஆம் ஆண்டுக்கான பொதுத்தேர்தல் நிறைவடைந்துள்ளது. இந்தநிலையில் ஒவ்வொரு கட்சிகளினதும் தேசிய பட்டியல் பெயர் விபரங்கள் இன்றைய தினம் தேர்தல்கள் ஆணையாளருக்கு கையளிக்கப்பட்டுள்ளன. 
இதன் அடிப்படையில் இலங்கை தமிழரசுக்கட்சி சட்டத்தரணியான எம் ஏ சுமேந்திரனை தமது தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்துள்ளது
தேசிய ஐக்கிய முன்னணியின் சார்பில் அநுரகுமார திஸாநாயக்க மற்றும் திரான் அலஸ் ஆகியோர் தேசியப்பட்டியலின் மூலம் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
ஐக்கிய தேசிய முன்னணியின் தேசியப்பட்டியலில் 
திஸ்ஸ அத்தநாயக்க 
ஜோசப் மைக்கல் பெரேரா 
எரான் விக்கிரமரத்ன 
ஹர்சத டி சில்வா 
டி எம் சுவாமிநாதன் 
ஆர் யோகராஜன் 
அனோமா கமகே 
மொஹமட் ஹசன் அலி 
மொஹமட் அஸ்லம் மொகமட் சலிம் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை எமது செய்திசேவைக்கு கிடைத்த தகவலின்படி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேசியப்பட்டியலில் 
டி எம் ஜயரட்ன. 
ரட்ணசிறி விக்கிரமநாயக்க 
டலஸ் அழகப்பெரும 
ஜி எல் பீரிஸ் 
டியு குணசேகர 
கீதாஞ்சன குணவர்த்தன 
கமலா ரணதுங்க 
ஏ எச் எம் அஸ்வர் 
மாலினி பொன்சேகா 
முத்து சிவலிங்கம் 
எல்லாவெல மேதாநந்த தேரர்
அத்துல ஜாகொட 
விநாயகமூர்த்தி முரளிதரன் 
சூரியபெரும ஜானக 
பிரியந்த பண்டார 
ரஜீவ் விஜேசிங்க 
திஸ்ஸ விதாரண ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
                      -
                    

  












0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’