மோட்டார் சைக்கிளில் சென்ற இனந் தெரியாதோர் மேற்கொண்ட வாள்வெட்டில் மூவர் படுகாயமடைந்தனர். இச் சம்பவம் நேற்றிரவு 6 மணியளவில் ஊர்காவற்றுறை நாரந்தனைப் பகுதியில் இடம் பெற்றுள்ளது. இவ்வாள்வெட்டிற்கு இலக்காகிய அதே இடத்தைச் சேர்ந்த எஸ்.ஜெகநாத் (வயது 30) எஸ்.கௌசிகன் (வயது 30) ஜே.சிவகாந்தன் (வயது 30) ஆகிய மூவரும் சிகிச்சைக்காக நேற்றிரவு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். புகையிலைக்குடில் அமைத்துக் கொண்டிருந்த போது இருவரும் கடையில் நின்றிருந்த போது மற்றொருவரும் வாள் வெட்டுக்கு இலக்கானதாக தெரிவிக்கப்பட்டது.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’