13 கிராம் நிறையுள்ள ஹெரோயின் வைத்திருந்த இரு சந்தேக நபர்களை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த ஜயகொடி தெரிவித்தார்.
ராஜகிரியவிலுள்ள அபேசுந்தரபுர பிரதேசத்தில் வைத்தே இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஒரு சந்தேக நபரிடமிருந்து 10 கிராம் ஹெரோயினையும் மற்றைய சந்தேக நபரிடமிருந்து 3 கிராம் ஹெரோயினையும் கைப்பற்றியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த ஹெரோயினை இவர்கள் எங்கிருந்து பெற்றுக் கொண்டனர் என்பன தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’