வன்னிப் பிரதேசத்தில் மீளக் குடியமர்ந்த பிரதேசங்களில் உள்ள கடற்றொழிலாளர் சங்கங்களின் செயற்பாட்டுக்கான தொடக்க நிலை உதவி நிதியை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் வழங்கினார்.
சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஏற்பாட்டில் இனங்காணப்பட்ட சங்கங்களுக்கான முதற்கட்ட நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கடற்றொழிலாளர் சங்கங்களுக்கே மேற்படி நிதி வழங்கப்பட்டுள்ளது.
இந் நிதியின் மூலம் சங்கங்களின் ஆரம்பப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் எதிர்காலத்தில் சங்கங்களின் செயற்பாடுகளுக்காக மேலும் பல உதவித்திட்டங்களை பெறுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் இந்நிதி வழங்கும் வைபத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் திரு. முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’