வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 20 ஏப்ரல், 2010

நாவலப்பிட்டியில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சுமுகமான வாக்களிப்பு _

பலத்த பாதுகாப்புக்களின் மத்தியில் நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியில் தற்போது மீள்வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம் பெற்றுக்கொண்டிருக்கின்றன. வாக்காளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களிப்பதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளதுடன்,வாக்களிப்பு நிலையங்கள் சூழவுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த நிலையங்களின் அருகில் எவ்வித பிரசாக் குழுக்களையும் காணமுடியவில்லை என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.வாக்காளர்கள் அமைதியாக வருகைத்தந்து வாக்களித்து விட்டுச்செல்வதை காணக்கூடியதாகவிருக்கின்றது.
பாதுகாப்புத் தரப்பினரின் ரோந்து சேவைகள் இடைவிடாது இடம் பெற்றுக்கொண்டிருப்பதாகவும்,நாவலப்பிட்டி நகரில் வழமையைவிட சனநடமாட்டம் மிகக்குறைவாக காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியிலுள்ள தோட்டப்பகுதி வாக்காளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
கபே ,பெப்ரல் போன்ற தேர்தல் கண்காணிப்பு குழுவினர்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். முற்பகல் 11 மணிவரை 25 சதவீத வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது.
கண்டி மாவட்டத்தில் போட்டியிடுகின்ற அரசியற்கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் வேட்பாளர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வருவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
இதுவரை எவ்விதமான தேர்தல் சம்பவங்களும் இடம் பெற்றதாக தகவல்கள் வெளியாகவில்லை.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’