""யாழ்ப்பாணத்துக்கான உங்கள் நுழை வாயில்'' எனும் தொனிப்பொருளிலான ""யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகச் சந்தை 2010'' கண்காட்சி இன்று காலை 9 மணிக்கு யாழ். மத்திய கல்லூரி தம்பர் மண்டபத் தில் கோலாகலமாக ஆரம்பமாகின்றது.
இன்று ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை வரை தொடர்ச்சியாக மூன்று நாள்கள் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை இந்தச் சந்தைக் கண்காட்சி நடைபெறவுள் ளது.
யாழ்ப்பாணம் வர்த்தக கைத்தொழில் மன்றமும் வரையறுக்கப்பட்ட இலங்கை கண்காட்சி மற்றும் மாநாடுகள் சேவைகள் தனியார் நிறுவனமும் இணைந்து இந்த வர்த்தகக் கண்காட்சியை நடத்துகின்றன.200இற்கும் மேற்பட்ட காட்சிக் கூடங் களைக் கொண்டிருக்கும் இந்த வர்த்தகக் கண்காட்சியில் இந்தியா, மலேசியா மற் றும் தென்னிலங்கையின் பிரபல நிறுவ னங்கள், கம்பனிகளும் பங்கேற்கின்றன. அவை மட்டுமன்றி வடபகுதியிலுள்ள வர்த்தக நிறுவனங்களும் இதில் பங்கு பற்றுகின்றன.
குறித்த மூன்று தினங்களும் பல்வேறு தலைப்புகளிலான தொடர் கருத்தரங்கும் மத்திய கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெறும்.
மேலும், யாழ். மத்திய கல்லூரி மைதா னத்தில் கண்கவர் சாகஸ நிகழ்வுகளும் பிரபல கலைஞர்களின் இசை நிகழ்ச்சியும் மற்றும் கார்ணிவேல் சவாரிகள் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெற வுள்ளன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’