-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
வியாழன், 15 ஏப்ரல், 2010
அமெரிக்காவில் கைதான நான்கு இலங்கையர்கள் நாடு கடத்தப்படவுள்ளனர்
சட்டவிரோத குடியேறிகள் என அடையாளம் காணப்பட்ட நான்கு இலங்கையர்கள் அமெரிக்காவில் இருந்து விரைவில் நாடுகடத்தப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டு தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களுடன் வந்த மேலும் 10 வெளிநாட்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹெயிட்டி, ஜமேக்கா போன்ற நாடுகளில் இருந்து வந்தவர்களே அவர்களாவர். எனினும் அவர்கள் குறித்த விபரங்களை வெளியிட அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
இலங்கையில் இருந்து 4 ஆண்களே அகதிகளாக சென்றுள்ளனர். அவர்கள் அனைவரும் விசாரணைகளின் பின்னர் நாடுகடத்தப்படுவர் என அமெரிக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்கள் வந்த படகில் இருந்து பெருந்தொகையான பணமும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’