குவைத்தில் அந்நாட்டவர் ஒருவரை திட்டமிட்டு கொலை செய்ததாக காணப்பட்ட இலங்கை நபர் ஒருவருக்கும் அவரது பெண் சகாவுக்கும் அவர்கள் இருவரும் சமுகமளிக்காத நிலையில் அந்நாட்டு நீதிமன்றம் ஒன்றினால் மரணதண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஹாஜி மொஹியித்தீன் என்ற சந்தேக நபர் மற்றும் அவரது பெண் சகாவான சிஷா சிபா ஆகியோருக்கு எதிரான கொலைக் குற்றச்சாட்டை முதலில் விசாரணை செய்த குற்றவியல் நீதிமன்றம் பின்னர் வழக்கை சிவில் நீதிமன்றத்திற்கு மாற்றியது.
கொலையுண்டவருக்கு சாரதியாகவும் வீட்டுப் பணிப்பெண்ணாகவும் பணியாற்றிய சந்தேக நபர்கள் இருவரும் 2006 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6 ம் திகதி அவர்களது முதலாளியை கொலை செய்துவிட்டு அவரது பணத்தை அபகரிப்பது என்று திட்டமிட்டார்கள் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அன்றைய தினம் முதலாளி படுக்கைக்கு செல்லும் வரை காத்திருந்து, அவர் நித்திரையான பின்னர் அவரது அறைக்குள் புகுந்து ஏற்கனவே தயாராக வைத்திருந்த கயிறு ஒன்றினால் அவரது கழுத்தை சுற்றி அவரது உயிர் பிரிந்து விட்டது என்பது உறுதியாகும் வரை அதனை இறுக்கியுள்ளனர்.
முதலாளியை கொலை செய்த பின்னர் அவரது பணத்தையும் ஏனைய பெறுமதி வாய்ந்த பொருட்களையும் எடுத்துக் கொண்டு உடனடியாக இருவரும் அங்கிருந்து தப்பியோடி குவைத்திலிருந்தே வெளியேறிவிட்டனர் இவ்வாறு தெரிவிக்கப்படுகிறது.
-













.jpg)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’