8 இலங்கை அகதிகள் 8 பேருக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் விசாவினை வழங்கியுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக செல்லமுற்பட்டு தடுத்து வைக்கபட்டிருந்த 41 பேருக்கு அவுஸ்திரேலியா விசாவினை வழங்கியுள்ளது.இவர்களுள் 27 ஆப்கானியர்களும், 8 இலங்கையர்களும் ஏனையோர் வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என குடிவரவு திணைக்களப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தற்போது கிறிஸ்மஸ்தீவில் உள்ள 36 பேருக்கான விசாக்கள் இன்றைய தினம் முதல் அமுலுக்கு வருகின்றன. கிறிஸ்மஸ் தீவில் இருந்த அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின்படி அவர்கள் அவுஸ்திரேலியாவில் தங்குவதற்கு தகுதி உடையவர்கள் என உறுதியானதன் பின்னரே அவர்களுக்கான விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன.இதேவேளை இலங்கையைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட குடும்பம் ஒன்று, கிறிஸ்மஸ் தீவில் இருந்து விசாரணைகளுக்காக மெல்பேர்னுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளது.
இதற்கிடையில் அகதிகளை கடத்தியமைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த 13 இந்தோனேசிய படகு செலுத்துனர்களும் டார்வின் தீவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’