வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 14 ஏப்ரல், 2010

புதுவருட பண்டிகைக் கால விபத்துக்களினால் 286 பேர் காயமடைந்துள்ளனர்//A9 வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 11 பேர் காயம் : மூவர் கவலைக்கிடம்

சித்திரை புதுவருட பண்டிகைக் கால விபத்துக்களினால் கடந்த 24 மணித்தியாலங்களல் 286 பேர் காயமடைந்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை வட்டாரம் அறிவித்துள்ளது.
பல்வேறு விபத்துக்களினால் பாதிக்கப்பட்ட 286 பேர் தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்தவர்களில் 96 பேர் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாக பிரதி வைத்தியப் பணிப்பாளர் பிரசாத் ஆரியவன்ச தெரிவித்துள்ளார்.
காயமடைந்தவர்களில் வீதி விபத்துக்களினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 94 எனக் குறிப்பிடப்படுகிறது.
பட்டாசு கொளுத்தல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களினால் ஏனையவர்கள் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, கடந்த காலங்களைவிட இந்த வருடம் விபத்துக்களில் காயமடைந்தவர்களின் தொகை அதிகம் என வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏ-9 வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 11 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த வாகனமே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
யாழ் - கண்டி ஏ-9 வீதியின் கொக்எலிய பிரதேசத்தில் அமையப் பெற்றுள்ள இராணுவ முகாமிற்கு அருகாமையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அதி வேகமாக சென்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மரமொன்றில் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக காணப்படுகின்றதெனத் தெரிவித்துள்ளார்.
அதிக வேகமாக வாகனத்தை செலுத்திய காரணத்தினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’