வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 12 ஏப்ரல், 2010

கடந்த தேர்தலை விட ஆளும் கட்சி 11 லட்சம் வாக்குகள் குறைவாகப் பெற்றுள்ளது : ரணில்

ஜனவரி மாதம் 26ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஆளும் கட்சி பெற்றுக் கொண்டதனை விடவும் 11 லட்சம் வாக்குகள் இந்த பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சிக்கு குறைவாக கிடைக்கப் பெற்றுள்ளதென ஐக்கிய தேசியக் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மக்கள் மத்தியில் ஆதரவு கூடியிருந்தால், ஜனாதிபதித் தேர்தலில் பெற்றுக் கொண்டதனை விடவும் அதிகமான வாக்குகளை பொதுத்தேர்தலில் அரசாங்கம் பெற்றுக்கொண்டிருக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியை மறுசீரமைப்பது குறித்து சகல மட்டத்தினருடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய எவரும் ஆளும் கட்சிக்கு தாவ முயற்சித்தால் அதற்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’