வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 30 ஏப்ரல், 2010

நல்லூரில் நட்சத்திர விடுதி : 10ஆம் திகதி இறுதி முடிவு

யாழ். நல்லூரில் ஐந்து நட்சத்திர விடுதி அமைக்கும் பணிகள் தொடர்பில் எதிர்வரும் 10ஆம் திகதி இறுதி முடிவு எடுக்கப்படும். யாழ். பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் மாவட்ட உள்ளூர் தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் ஆலோசனையின் கீழ் விடுதி தொடர்பிலான இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என யாழ் மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார்.
பி.எல்.சி வங்கியின் அனுசரணையுடன் 400 மில்லியன் ரூபா செலவில் 80 அறைகள் கொண்ட உல்லாசப் பயணிகளுக்கான நட்சத்திர விடுதி அமைக்கும் பணியில் பல பாகங்களில் இருந்தும் வந்த எதிர்ப்புக்களைத் தொடர்ந்தே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மேயர் குறிப்பிட்டார்.

குறிப்பாக 4 விடயங்களை அடிப்படையாகக் கொண்டு ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்று, நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு சமீபமாக நட்சத்திர விடுதியை நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டிருப்பது. யாழ்ப்பாணத்திலுள்ள பெரும்பாலான இந்து தமிழர்கள் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இரண்டு, நட்சத்திர விடுதி அமைக்கப்படவுள்ள காணி. இது பண்டைய கால தமிழ் மன்னரான சங்கிலியனின் கோட்டை அமைந்திருந்த இடம்.
மூன்று, யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்களின் அடிப்படை வசதிகள்,பொருளாதாரத் தேவைகள் இன்னமும் பூர்த்தி செய்யப்படாதிருக்கும் நிலையில், 400 கோடி ரூபா செலவில் நட்சத்திர விடுதி அமைப்பது முக்கியமான ஒன்றல்ல என்ற கருத்து.
நாங்கு , பாரிய செலவினத்தில் இந்த நட்சத்திர விடுதி அமைக்கப்படுவதால் யாழ்ப்பாணத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு அது உதவியாக அமையாது என்ற அபிப்பிராயம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’