வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 19 மார்ச், 2010

இரண்டு தமிழர் உட்பட நான்கு இலங்கையர்களை அவுஸ்திரேலியா நாடு கடத்தியது

Loogix.com. Animated avatars. அரசியல் புகலிடம் கோரிச் சென்ற இரண்டு தமிழர் உட்பட்ட நான்கு இலங்கையர்களை அவுஸ்திரேலியா அரசாங்கம் நாடுகடத்தியுள்ளது.
இந்த நான்கு இலங்கையர்களும் அகதி அந்தஸ்துக் கோரி முன்வைத்த விண்ணப்பம் வெற்றியளிக்கவில்லை என குடிவரவு மற்றும் பிரஜா உரிமை திணைக்களத்தின் பேச்சாளர் இன்று தெரிவித்தார்.
இவ்வாறு திருப்பியனுப்பப்பட்டவர்களில் இரண்டு தமிழர்கள், ஒரு சிங்களவர் மற்றும் ஒரு முஸ்லிம் அடங்குவதாகவும் அவர் கூறினார்.
கடந்த 2008ஆம் ஆண்டு அரசியல் புகலிடம் கோரி விண்ணப்பித்திருந்த 80 பேர் அவுஸ்திரேலியாவிலிருந்து, இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’