அங்கே உயிரற்ற பிணத்தை சாப்பிடுகிறான் ஒரு கள்ளச் சாமி இங்கே உயிருள்ள பிணத்தை சாப்பிடுகின்றான் நித்தியானந்தா
கள்ளச் சாமி[ இதில் நான் பிணம் என்று குறிப்பிட்டது நல்ல பெண்களை அல்ல இந்த ஈனப்பிரவியை] வீடியோவைப்பார்த்தாவது ஒன்று இந்துக்களாகிய நாம் திருந்த வேண்டும் அல்லது இந்த கள்ளச் சாமிகளை நடுத்தெருவில் நிர்க்க வைத்து செருப்பு மாலை அணிவித்து அடித்து இழுத்து செல்ல வேண்டும் இனியும் இந்துக்கள் கள்ளச் சாமிகளுக்கு இடம் கொடுக்கக்கூடாது அடுத்தது திரைப்படத்துறையினர் இப்படியான திரைப்படத்துறையை அவமானப்படுத்தும்
இழிவான பெண்களை திரைப்படத்தில் நடிக்க இடம் கொடுக்காமல் இவருக்கு சரியான தண்டனை எப்படி கள்ளச் சாமிக்கு செய்ய வேண்டுமோ அப்படியே இந்த பெண்ணையும் இழிவு படுத்தி இப்படியான செயல்கள் இந்துக்கலுக்கு நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
அடுத்தது நீ இந்தியனோ இலங்கையனோ ஆப்பிரிக்கனோ எக்கேடோ கெட்டுப்போ அக்கிரமங்களை, அசிங்கங்களை, தட்டிக்கேட்க்கும் மனிதனாக இருந்தால் போதும் ஏதே அதனால் இந்துக்கலுக்கு எந்த சிரப்பு அம்சமும் இல்லை என்று என்னி விட வேண்டாம் தமிழகம் இப்படி கேவலமான ஈனப்பிரவியை இதுவரை பார்த்ததில்லை இனியும் நல்ல மாற்றங்கள் தொடரட்டும் என்று எதிர் பார்ப்போம்
மக்களே சிந்தியுங்கள்...
இதோ பெரியார் பேசுகிறார்...
நான் சொல்வதைப் பல பேர் கேட்டு நடக்க ஆரம்பித்திருக்கிறபடியாலும், நானே வந்து அவ்விசயங்களைச் சொல்ல வேண்டுமென்று கேட்கின்றபடியாலும், என்னால் சொல்லப்படுகின்ற உண்மை ஜனங்களின் உண்மையான உணர்ச்சியில் தோன்றக்கூடியதுதான் என்றும், அதுதான் சுயமரியாதையுள்ள மக்களுக்குள்ள உயர்ந்த அபிப்பிராயமென்றும், அதையேதான் நான் சொல்கின்றேன் என்றும் உணர்கின்றேன்.
ஆனால், நான் சொல்வதையெல்லாம் நீங்கள் கேட்டதன்படி நடக்க வேண்டுமென்று கட்டாயமில்லை. நான் சொல்வதைக் கேட்காவிட்டால் நரக தண்டனையென்று நான் மேற்கோளும் காட்ட வரவில்லை.
சங்கராச்சாரி, மடாதிபதிகள், குருக்கள், புரோகிதர்களுடைய ஊழல்களைச் சொல்லுவதானால் நான் மேற்படி மடாதிபதியாக வருவதற்கல்ல. நான் நாயன்மாராகவோ ஆழ்வாராகவோ ஆவதற்கல்ல.
ஆனால் என் அனுபோகத்திற்கும், ஆராய்ச்சிக்கும் உண்மையென்று பட்டதை நான் உள்ளபடி உணர்வதை உங்களுக்கும் சொல்லுகின்றேன். உங்கள் அறிவிற்கு அது சரியென்றுபட்டால் கொள்ளுங்கள், அல்லவென்றுபட்டால் தள்ளுங்கள். சரியென்று பட்டபின் அதைக் கொள்ள தைரியமில்லாமல் ஊரை ஏமாற்ற நாயக்கர் நாஸ்திகம் பேசுகிறார் என்று சொல்லி வீண் பழிபாவத்திற்கு உள்ளாகாதீர்கள்.
நமது சமூகத்திற்கு எதிரிகளாக இருந்து நம்மைக் காட்டிக் கொடுத்து பிழைக்கும் கோடாரிக் காம்புகளின் பேச்சைக் கேட்டு ஏமாறாதீர்கள்.
கடவுள் என்று சொல்லிக் கொண்டு கடவுள் பேரால் விபச்சாரம் செய்து கொண்டு, கடவுள் பேரால் தீண்டாமையை உற்பத்தி செய்து கொண்டிருப்பதையெல்லாம் தான் நான் கண்டிக்கிறேன்.
கடவுளை நம்புகிறவன் யோக்கியமாய் இருக்க வேண்டியது அவசியம். கடவுளை நம்பி யோக்கியமாய் இருக்க முடியவில்லையானால், கடவுளைப்பற்றி கவலைப்படாமலாவது நீங்கள் யோக்கியர்களாய் இருக்க வேண்டுமென்பது தான் என் கோரிக்கை.
எல்லாரையும் சமமாயும், சகோதரராயும் பாவிக்க வேண்டும். எல்லோரிடத்திலும் அன்பு செலுத்துதல் வேண்டும். தீண்டாமையை அறவே ஒழிக்க வேண்டும். தாசித் தொழில் ஒழிய வேண்டும். பால்ய விவாகம் ஒழிந்து நம் பெண்கள் எப்பொழுதும் சுகமாயிருக்க வேண்டும். பொய் சொல்லக் கூடாது. திருடக் கூடாது. யோக்கியமாய் சுயமரியாதையுடன் வாழ வேண்டுமென்று இதுபோல் சொல்லி வருகின்றேன். இதைச் சில அயோக்கியர்களும், அவர் தம் பத்திரிகைகளும், பொறாமை, சுயநலம், அற்பபுத்தி காரணமாக நாஸ்திகம் என்று பேசியும், எழுதியும் வருகின்றன.
இவையெல்லாம் நாஸ்திகமாயின் பின் ஆஸ்திகம்தான் என்ன?
கடவுள் பேரால் பொட்டுக்கட்டி விபசாரத்திற்கு விடுதலும், கடவுள் பேரால் தீண்டாதார்களைக் கோயிலுக்குள் கும்பிட விடாமலும், கடவுள் பேரால் இளங்கன்னிகைகளைக் கல்யாணம் செய்து அறுதலியாக்குவதும், கடவுள் பேரால் 100–க்கு தொண்ணூற்று ஆறரை பேர் முட்டாளாகவும், மூன்றரை பேர் படிக்கவும், கடவுள் பேரால் ஒரு வகுப்பார் உட்கார்ந்து சாப்பிடவும், மற்றொரு வகுப்பார் உப்பில்லாமல் ஓடி உழைக்கவும், கடவுள் பேரால் பொய் சொல்லவும், திருடவும், பலியிடவும், யாகங்கள் செய்யவும், ஏமாற்றவும் செய்தால் இதுதானா ஆஸ்திகம் என்று கேட்கின்றேன். அப்படியானால் இந்த ஆஸ்திகத்தை ஒழிப்பதே உலகுக்கு நன்மை பயக்குமல்லவா?
உங்கள் அறிவை விளக்கி இம்மாதிரி ஆஸ்திகப் பேச்சைவிட நான் சொல்லும் பேச்சில் ஆஸ்திகம் அதிகமாயிருக்கிறதா, நாஸ்திகம் இருக்கிறதா என்று பகுத்தறிந்து பின்பற்றுங்கள். அயோக்கியர்கள் உங்களை நீண்ட காலம் ஏமாற்ற முடியாது.
மதத்தின் பேரால் பார்ப்பனர்களின் பொய், புரட்டு, வேதம், புராணம், சாஸ்திரம் முதலியவற்றில் நம் மக்கள் பல்லாயிரக்கணக்கான வருசங்களாக அடிமைப்பட்டு விட்டனர்.
சுயமரியாதையே இல்லாது போய்விட்டது. சுயமரியாதை இல்லாது போனால் சுயராஜ்யம் எங்கே இருக்கும்?
கிறிஸ்தவ மதத்திற்கு ராஜ்யமிருக்கிறது. புத்த மதத்திற்கு ராஜ்யமிருக்கிறது. முகமதிய மதத்திற்கு ராஜ்யமிருக்கிறது. அந்தந்த ராஜ்யம் அந்தந்த மதத்தார்களால் ஆளப்படுகிறது. ஆனால், பழைய தொண்மையான இந்து மதத்திற்கு அநாதி காலந்தொட்டு ராஜ்யமுமில்லை. இருக்கிற ராஜ்யத்தையும் இந்துக்கள் ஆளாமல் அந்நியர் ஆளுகின்றனர். ஒவ்வொரு மதத்திற்கும் ஜனத்தொகை பெருகுகின்றது. நம் பழைமையான இந்து மதத்திற்கு ஜனத்தொகை குறைகின்றது.
இந்தியாவில் உள்ள இந்து மதச் சம்பிரதாயப்படியுள்ள தீண்டாமையென்னும் கொடிய வழக்கத்தால் சுமார் ஏழு, எட்டுக் கோடி முகமதியர்களாகவும், கிறிஸ்தவர்களாகவும் ஆகிவிட்டனர். இன்னும் தீண்டாமை ஒழியாவிட்டால் முகமதியராகவும், கிறிஸ்தவராகவும் ஆவதற்காக ஆறு கோடி பேர் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்துவாக இருந்து முகமதியராக மாறினவர்களுக்கும், துருக்கி சுல்தானுடனும், ஆப்கன் அமீருடனும் சமத்துவமாக நின்று தொழவும், குரான் படிக்கவும், உணவு அருந்தவும் சமத்துவமான சுதந்திரம் உண்டு.
இதுபோல் கிறிஸ்தவ மதத்திலும், புத்த மதத்திலும் உண்டு. ஆனால், பழைய இந்து மதத்தில் கடவுளைப் பார்க்கக் கூடாத ஒரு ஜாதி, கிட்டே போகாத ஜாதி, இந்து வேதத்தைப் படிக்கக் கூடாத ஜாதி உண்டு. ஆனால், அதை ஒப்புக் கொள்கிறவன் தான் இந்து. இதெல்லாம் வெறும் புரட்டும், மக்களை ஏமாற்ற எழுதி வைத்ததும் தற்கால வாழ்விற்கு வேண்டாததும், ஆகியவையா இல்லையா என்று தான் கேட்கின்றேன்.
ஆதலால், இந்தப் புரட்டையெல்லாம் உதறித் தள்ளி நல்ல சமயத்தில் பற்றிக் கொண்டு நல்ல காரியத்தைச் செய்யுங்கள் என்றால் நாஸ்திகம் என்று குறுக்கே சொல்ல வந்துவிடுகிறார்கள்.
- தோழர் பெரியார்.
[20.03.1928-இல் அலசந்தாபுரத்தில் தோழர் பெரியார் நிகழ்த்திய சொற்பொழிவில் இருந்து சில... ´குடிஅரசு,´ 15.04.1928]
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’