விடுதலைப்புலிகளின் தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் இலங்கை பொறுப்பாளராக பணியாற்றிய ரெஜி என்ற கனகலிங்கம் பிரேமராஜி என்பவரை கைதுசெய்வதற்காக சர்வதேச பொலிஸார் சர்வதேச ரீதியிலான பிடிவிராந்தை பிறப்பித்துள்ளதாக திவயின தெரிவித்துள்ளது.
விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் இடையிலான இறுதிக்கட்ட மோதல்கள் நடைபெற்ற போது ரெஜி வன்னியில் இருந்து லண்டனுக்கு தப்பிச் சென்றுள்ளார். எனினும் இவரை பிரித்தானிய அரசாங்கம் கைதுசெய்து இலங்கைக்கு அனுப்பவில்லை.
தமிழர் புனர்வாழ்வு கழகம் கொழும்பில் இயங்கிய போது, ரெஜி வர்த்தகர்கள் பலரிடம் பெருமளவில் நிதியை பெற்றுக்கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு நிதி வழங்கிய வர்த்தகர்களின் பட்டியல் ஒன்று மட்டக்களப்பு பிரதேசத்தில் இருந்து படையினரால் மீட்கப்பட்டதாகவும் திவயின தெரிவித்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’