வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 6 மார்ச், 2010

மூச்சுத் திணறல்... மருத்துவமனையில் சல்மான்கான்!


தீவிபத்துக் காட்சியில் நடித்த போது ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக நடிகர் சல்மான்கான் மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டார்.

சல்மான்கான் தம்பி அர்பாஸ்கான் முதல்முறையாக தபாங் என்ற இந்திப் படத்தை தயாரிக்கிறார். இதில் சல்மான்தான் ஹீரோ.

மகாராஷ்ட்ராவில் உள்ள சதாரா பகுதியில் இதன் படப்பிடிப்பு நடந்துவந்தது.

ஒரு சுரங்கப் பாதையில் தீப்பிடித்துக் கொண்டவுடன், அங்கிருந்து சல்மான்கான் ஓடுவது போன்ற காட்சி படம் பிடிக்கப்பட்டது. இந்தக் காட்சி திருப்தியாக அமையாததால், திரும்பத் திரும்ப எடுக்கப்பட்டது. சல்மான்கானும் திரும்பத் திரும்ப ஓடினார். இதில் புகை மூட்டத்தில் சிக்கி அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

மயங்கிய நிலைக்கு வந்துவிட்ட சல்மானை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.

தகவல் அறிந்ததும் சல்மான்கான் அவரைப் பார்ப்பதற்காக அவரது ரசிகர்கள் மருத்துவமனை முன்பு திரண்டனர். ஆனால் சல்மான்கானை பார்க்க அவரது பாதுகாவலர்கள் அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் கல் வீசித் தாக்குதல் நடத்தினர்.

போலீசார் விரைந்து வந்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

'சல்மான்கானுக்கு காயம் எதுவுமில்லை. புகையால் ஏற்பட்ட மூச்சுத் திணறல்தான் இது. விரைவில் அவர் உங்களைப் பார்ப்பார்' என்று விளக்கம் அளித்து ரசிகர்களை கலைந்து போகச் செய்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’