வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 22 மார்ச், 2010

சிவாஜிலிங்கத்தை என்னிடமிருந்து பிரித்தெடுக்க முயற்சித்துப் பாருங்கள் : என். ஸ்ரீகாந்தா

தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் இடதுசாரி விடுதலை முன்னணிக் கட்சி சார்பில் வேட்பாளருமாகப் போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீகாந்தா "உதயனுக்கு' வழங்கிய செவ்வி இது.

 கேள்வி: கஜேந்திரகுமார் பொன் னம்பலமும் கூட்டமைப்பு தனது கொள்கையில் இருந்து விடுபட்டுள்ளது என்று கூறுகிறார். நீங்களும் அதைத் தான் கூறுகிறீர்கள். அப்படியானால் கொள்கையில் இருந்து விலகிக்கொள் ளாத நீங்கள் அனைவரும் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டிருக்கலாமே?
பதில்: கஜேந்திரகுமாருக்கும் எங்களுக்குமிடையே ஒரு இணைப்பு முயற்சியொன்று தீவிரமாக நடைபெற்று வந்தது. கஜேந்திரகுமாருடன் நேரடியாகப் பேசுவதற்கு சிவாஜிலிங்கம் பலதடவை முயற்சியெடுத்தும் அது பலனளிக் கவில்லை.
இருப்பினும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அணியில் உள்ள தரப்பினர் எங்களுடன் பேச முயற்சித்து அந்தப் பேச்சுவார்த்தையில் சிவாஜிலிங்கம் மற்றும் எனது நீண்டநாள் நண்பரான கலாநிதி கெனடியையும் தமது கட்சியின் வேட்பாளர்களாகத் தந்துவிட்டு என்னையொரு ஆலோசகராக இருக்குமாறும் கேட்டுக் கொண்டனர்.
என்னை நம்புங்கள். கட்சியின் ஆலோசகராக இருக்கச் சொல்லுமாறு விடுக்கும் இந்தக் கோரிக்கை எவ்வளவு நகைப்புக்கிடமானது. இந்தக் கோரிக்கையினால் புதுவிதமான அரசியல் பண்பாடு உருவாகிறது. எனக்கு ஏற்பட்ட ஆத்திரத்தை அடக்கியபடி முடியுமானால் சிவாஜிலிங்கத்தை என்னிடமிருந்து பிரித்தெடுக்க முயற்சித்துப் பாருங்கள். அது உங்கள் கெட்டித்தனம் என்று கூறினேன்.
இருப்பினும் நண்பன் கலாநிதி கெனடியை தங்கள் பக்கம் கூட்டிச் சென்றுவிட்டார்கள். அவர் இப்போது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அணியினர் வட்டுக்கோட்டைத் தீர்மானம் பற்றி மிகவும் கெட்டித் தனமாகப் பேசிவருகின்றனர்.
இலங்கைத் தீவில் இறையாண்மை, நில ஆதிபத்திய முற்றுகையையும் பேணிப்பாதுகாப்போம் என்று வேட்பாளர் நியமனப் பத்திரத்தில் அர சியலமைப்பின் கீழ் சத்தியப் பிரகடனம் செய்து கையொப்பமிட்டு இந்தத் தேர்தலில் போட்டியிடுவது நேர்மையானதல்ல. அது அவரின் இரட்டை வேடத்தைப் படம் போட்டுக் காட்டுகிறது.
கஜேந்திரகுமாரைப் போல மக்களை ஏமாற்றும் பம்மாத்து அரசியலுடன் நாங்கள் ஒத்துப்போக முடியாது. மக்களுக்கு நாங்கள் உண்மையாக  நேர்மையாக நடக்க வேண்டும்.
இன்றைய சர்வதேச நிலையில் நடந்துமுடிந்த யுத்தம் தந்திருக்கும் அனுபவப்படிப்பை வட்டுக் கோட்டைத் தீர்மானம் பற்றி எவரும் பேச முயற்சித்தால் அது வெறும் வாய் ஜாலமே. என்றார் ஸ்ரீகாந்தா.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’