ரஞ்சிதாவுடன் செக்ஸ் லீலையில் ஈடுபட்ட நித்யானந்தன் குற்றமற்றவராகவே தங்களுக்குத் தெரிவதாகவும் அவருக்கு இன்னும் அவகாசம் தரவேண்டும் என்றும் இந்து முன்னணி அமைப்பாளர் ராம கோபாலன் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
ஒருவர் மீதுள்ள குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் நிரூபணம் ஆகாத வரையில் அவர் குற்றமற்றவர் என்று நினைப்பதுதான் மரபும், பண்பாடும் ஆகும்.
சுவாமி நித்யானந்தா தன்நிலை விளக்கமளிக்க அவருக்குப் போதிய கால அவகாசமும் வழங்கப்பட வேண்டும்
.இதுவரை எங்களுக்குக் கிடைத்துள்ள தகவல்படி அவர் குற்றமற்றவர் என்றே நம்புகிறோம். ஆசிரமத்துக்குச் சொத்து இருப்பது பாவமல்ல. அந்த சொத்து தவறான முறையில் சேர்க்கப்பட்டிருந்தால் அது தண்டனைக்குரிய குற்றம். வழக்கு தொடுப்பதன் மூலம் அது குறித்து விசாரிக்க முடியும்.
வருமான வரித்துறையினர் இது குறித்து ஆய்வு நடத்த முடியும்.
அரசியல் ஆசாபாசங்களால் உந்தப்பட்டும், பிடிவாதம் மற்றும் பழிவாங்கும் எண்ணத்துடனும் அவரை நடத்துவதும் துறவிகளையே இழிபடுத்துவதாகும். இதை இந்து சமுதாயம் ஒருநாளும் ஏற்காது.
சுவாமிக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்களைப்பற்றி ஒளிபரப்பப்பட்ட காட்சிகளைப் பார்க்கும்போது ஒரு சிறு கும்பல் மட்டுமே இதைச் செய்வதும் சாதாரண மனிதன் இதில் ஈடுபடவில்லை என்பதும் தெளிவாகிறது.
அவர் பற்றிய அனைத்து விவரங்களையும் அவர் வெளியிடும் வரை காவல்துறையும், அரசும், மக்களும் நடுநிலையாக இருக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக் கொள்கிறது..., என்று தெரிவித்துள்ளார்.














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’