பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் இன்பசேகரன் 77,637 வாக்குகள் பெற்று வெற்றியடைந்திருக்கிறார்.
பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் தமிழ்க்குமரன் 41,285 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
அதிமுக வேட்பாளர் அன்பழகனும் தேமுதிக வேட்பாளர் காவேரி வர்மனும் பதிவான மொத்த ஓட்டுக்களில் ஆறில் ஒரு பங்கு ஓட்டுக்களைக்கூட பெறாததால் ‘டெபாசிட்’ கட்டுப்பணத்தை இழந்தனர். அவ்வாறே தொகுதியில் போட்டியிட்ட 27 சுயேச்சை வேட்பாளர்களும் டெபாசிட் இழந்துள்ளனர்.
தேர்தல் வெற்றி குறித்து கருத்து வெளியிட்டுள்ள முதல்வர் கருணாநிதி இந்த இடைத் தேர்தலில் மக்கள் அளித்துள்ள வெற்றி, திமுக அரசின் பயணத்திற்கு மேலும் ஒரு தூண்டுகோலாக அமையும் எனக்கூறியிருக்கிறர்.
2006 சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பிறகு நடந்த அனைத்து இடைத்தேர்தல்களிலும் திமுக கூட்டணியே வெற்றி பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த ஆண்டோ அதற்கு முன்னரோ கூட சட்டமன்றத்தேர்தல்கள் நடைபெறவிருக்கும் நிலையில் அஇஅதிமுக தனது உத்திகளை மாற்றிக்கொள்ளவேண்டும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இன்னொருபுறம் தனித்துப் போட்டியிட்டு தொடர்ந்து தோல்வியை சந்தித்துவரும் தேமுதிகவின் எதிர்காலம் குறித்து அதன் தலைவர் விஜயகாந்த் சிந்திக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்றும் நோக்கர்கள் கருதுகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’