வன்னியில் மீளக் குடியமர்த்தப்பட்ட மக்கள் முற்றுமுழுதாக ராணுவ நெருக்குவாரங்களின் கீழேயே வாழ்ந்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. அண்மையில் இலங்கை கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர்குழு ஒன்று மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடி விஜயம் செய்திருந்தது.
யாழ்ஆயர் அதி வணக்கத்திற்குரிய தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை தலைமையில் இடம்பெற்ற இக்குழுவில் குருநாகல், பதுளை, ரத்தினபுரி, சிலாபம், மன்னார் குருமுதல்வர் அன்ரனி விக்ரர் சூசை ஆகியோரும் விஜயம் செய்திருந்தனர். முல்லைத்தீவு , கிளிநொச்சி பங்குத் தந்தை அருட்திரு ஜோன் அடிகளார் இவர்களுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார். மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்ற குழுவினர் மக்கள் முற்றுமுழுதாக இராணுவ நெருக்குவாரங்களுக்கு மத்தியில் வாழ்வதாகவும் அடிப்படை வீட்டு வசதிகள் எதுவும் அற்ற நிலையிலேயே அவர்கள் உள்ளதாகவும் தமது அன்றாடத் தேவைகளுக்கான பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக நீண்டதூரம் பயணிக்க வேண்டிய தேவை இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’