வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 23 மார்ச், 2010

சிரச வலையமைப்பு தாக்குதல் : ஊடகவியலாளர் தேசிய ஒன்றியம் கண்டனம்

சிரச ஊடக வலையமைப்பின் மீது இனந்தெரியாதோர் நேற்று நடத்திய தாக்குதல் சம்பவத்தினை ஊடகவியலாளர்கள் தேசிய ஒன்றியம் வன்மையாகக் கண்டிப்பதாகக் குறிப்பிட்டுள்ள அதேவேளை, இதற்கான முழுப்பொறுப்பினையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

பிரதியமைச்சர் ஒருவரின் ஆதரவாளர்கள் எனக் கூறப்பட்ட சிலர் சிரச ஊடக வலையமைப்பின் மீது நேற்று பிற்பகல் கற்களால் தாக்குதல் நடத்தினர். இதன்போது இருவர் காயமடைந்ததுடன் கட்டடம் சேதத்துக்குள்ளானது.
இது தொடர்பாக ஊடகவியலாளர்களின் தேசிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் பல தடவைகள் சிரச ஊடக நிறுவனம் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட போதிலும், சம்பந்தப்பட்டோர் மீது விசாரணை எதுவும் நடத்தப்படவில்லை; உரிய தண்டனை பெற்றுக் கொடுக்கப்படவுமில்லை. அதுவே சிரச ஊடக நிறுவனம் தொடர்ச்சியாகத் தாக்குதலுக்கு உள்ளாகப் பிரதான காரணம் என அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 16 பேர் பொலிஸாரால் நேற்றுக் கைது செய்யப்பட்டு இன்று விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’