
நித்தியானந்தாவின் காம லீலைகளுக்கு ரஞ்சிதா முற்றுப்புள்ளி அல்ல, அவர் ஒரு கமாதான். அவரைப் போல மேலும் பல நடிகைகளுக்கும் நித்தியானந்தாவுடன் தொடர்பு இருப்பதாக செய்திகள் கூறுகின்றன.
குறிப்பாக நடிகைகளுக்கு அவருடன் மிக நெருக்கமான தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
பழம்பெரும் நடிகை ஒருவரின் தங்கை ஒரு நடிகை. அவருடைய மகளும் முன்பு நடிகையாக இருந்தார். இப்போது வாய்ப்பிழந்து போய் விட்டார். இந்த நடிகைக்கும், நித்தியானந்தாவுக்கும் இடையே நீண்ட காலமாகவே பழக்கம் உள்ளதாம்.
அதேபோல முன்பு சினிமாவில் அறிமுகமாகி பின்னர் டிவியில் தொடர்களில் நடித்து வந்த யுவ என்ற பெயரைக் கொண்ட நடிகைக்கும், நித்தியானந்தாவுக்கும் இடையே நெருங்கிய தொடர்புகள் இருக்கிறதாம். இவரும் நித்தியானந்தாவின் ரெகுலர் கஸ்டமர்களில் ஒருவராம்.
அதேபோல சின்னப் பூவே மெல்லப் பேசு படத்தில் நடித்த ஒரு நடிகைக்கும், நித்தியானந்தாவுக்கும் இடையே நல்ல தொடர்புகள் இருக்கிறதாம். இவரும் தொடர்ந்து நித்தியானந்தாவை பார்த்துச் செல்பவராம்.
இவர்கள் தவிர நடிகை ராகசுதா (இவர் நடிகை கே.ஆர்.விஜயாவின் தங்கை மகள்), நித்தியானந்தாவின் மீது கொண்ட பற்றால், அவருடைய சிஷ்யையாகி பெங்களூர் ஆசிரமத்திலேயே தங்கியுள்ளாராம்.
இதேபோல மேலும் பல நடிகைகளுடனும் நித்தியானந்தாவை இணைத்துப் பேசி செய்திகள் வருகின்றன.
நித்தியானந்தாவின் லீலைகளில் திரையுலகத் தொடர்புகளே அதிகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. தனது பக்தைகளிடம் அவர் ஏதாவது கைவரிசை காட்டினாரா என்பது குறித்து இதுவரை எந்தத் தகவலும், புகாரும் வரவில்லை. அதேசமயம், திரைப்பட நடிகைகள்தான் இவரிடம் பெருமளவில் தொடர்பு வைத்திருந்ததாக செய்திகள் கூறுகின்றன.
நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருந்து பிடிபட்டுள்ள நித்தியானந்தா விவகாரத்தால் அவருடன் தொடர்பு வைத்துள்ள நடிகைகள் மத்தியில் பெரும் கலக்கம் ஏற்பட்டுள்ளதாம்.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’