வடக்கு கிழக்கில் நீதித்துறையை புனரமைப்பதுடன் அதனை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளதாக நீதி சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொறகொட தெரிவித்தார்
அபிவிருத்தி வங்கியின் ஏழு மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியில் வடக்கில் புதிதாக நீதிமன்றங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.வட மாகாண நீதித்துறையை மேம்படுத்துவது தொடர்பாக ஆராயவென 15 பேர் அடங்கிய விஷேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், அந்தக் குழுவின் ஆலோசனைக்கமைய பல்வேறு நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவுள்ளோம் என்றும் தெரிவித்தார்.
இதேவேளை அரசாங்கத்தின் செலவில் பருத்தித்துறை நீதிமன்றம் நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். வடக்கிற்குத் தேவையான தமிழ் பேசும் நீதிபதிகள் சட்டத்தரணிகளை வழங்க திட்டமிட்டுள்ளதுடன் சட்ட உதவிகளை வழங்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவருவதாக குறிப்பிட்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’