-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்
;
செவ்வாய், 2 மார்ச், 2010
ரஷ்ய காட்டுக்குள் யுத்த டாங்கிகள் அடர்ந்த காட்டுக்குள் எப்படி வந்தது?
உலகில் உள்ள மிகப்பெரிய இராணுவ பலத்தைக் கொண்ட நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று. இந்த நிலையில் இராணுவத்துக்குச் சொந்தமான 200 போர் டாங்கிகள் யெகாடரின் பர்க் நகரின் அருகேயுள்ள ஒரு காட்டில் கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதை ஒரு பத்திரிகை நிருபர் போட்டோ எடுத்து அதை ஓர் இணையதளத்தில் வெளியிட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த டாங்கிகள் டி.80 மற்றும் டி.72 ரக போர் டாங்கிகளாகும். கடந்த 4 மாதங்களாக இவை பனி மூடிக்கிடந்தது. கோடை காலம் தொடங்கியதை தொடர்ந்து தற்போது பனி உருகி வெளியே தெரிய தொடங்கியுள்ளது.
இவை ரஷ்ய இராணுவத்தில் பயன்படுத்தப்பட்டவையாகும். இந்த டாங்கிகள் அனைத்தும் அடர்ந்த காட்டுக்குள் எப்படி வந்தது? இதை ஓட்டி வந்து இங்கு நிறுத்தியது யார் என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.
இராணுவ அதிகாரிகளின் துணையுடன் இவை அங்கு கடத்தி வரப்பட்டதாக ஊழல் புகார் கூறப்பட்டுள்ளது. இந்த புகாரை இராணுவ கமாண்டர் மறுத்துள்ளார்.
ரஷ்ய இராணுவத்தில் உள்ள 20 ஆயிரம் பழைய ரக டாங்கிகள் படிப்படியாக அழிக்கப்பட்டு வருகின்றன. அதற்காக அவை இங்கு கொண்டு வரப்பட்டுப் பாதுகாப்பாக அழிக்கப்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’